தமிழகம்

கடவுள் இல்லை என சொல்வோருக்கு கோயிலில் என்ன வேலை? - கேட்கிறார் நடிகை விந்தியா

செய்திப்பிரிவு

கடவுள் இல்லை என்று சொல்பவர்​களுக்கு கோயிலில் என்ன வேலை? என்று சிதம்​பரத்தில் நடந்த பிரச்​சாரக் கூட்டத்தில் அதிமுக கொள்கைபரப்பு இணைச் செயலா​ளரும் நடிகை​யுமான விந்தியா கேள்வி எழுப்​பி​னார்.

சிதம்பரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலா​ள​ரும், நடிகை​யுமான விந்தியா பேசியதாவது: திமுக அரசு சிதம்பரம் கோயில் சொத்துகளையும் நிர்வாகத்​தையும் உரிமை​களையும் பறிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்து அறநிலை​யத்துறை ஸ்டாலின் வீட்டு சமையல் அறையாக மாறியுள்ளது.

          

திருப்​பரங்​குன்​றத்தில் முருகருக்கு எதிராக நீதிமன்றம் சென்றனர். அடுத்த நாளே அந்த கோயில் அருகே ஸ்டாலின் கார் டயர் வெடித்தது. சிதம்பரம் கோயிலை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்​றனர். ‘கடவுளே இல்லை’ என்று சொல்பவர்​களுக்கு கோயிலில் என்ன வேலை? தமிழகத்தில் சைவத்​துக்கும் வைணவத்​துக்கும் சண்டை​யில்லை. இந்து - முஸ்லிம் இடையே சண்டை இல்லை. ஆனால் அத்தனை சண்டைகளையும் திமுக உருவாக்க பார்க்​கிறது.

மக்களுக்கான பிரச்​சினையை பேசாமல், எப்போதும், ‘தமிழ்​நாட்​டுக்குள் பாஜக வந்து​விடும்; பாஜக வந்து விடும்’ என்றே திமுக​வினர் பிரச்​சாரம் செய்து வருகின்​ற​னர். அதைச் சொல்லியே பூச்சாண்டி காட்டு​கின்​றனர். இந்தத் தேர்தல் நல்லசக்​திக்​கும், தீய சக்​திக்கும் இடையே நடை​பெறும் தேர்தல். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT