சினிமா டப்பிங்குக்கு குரல் கொடுத்தால் போதும் என விஜய் தி நினைக்கிறார் என்று, முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரான நடிகர் கருணாஸ் விமர்சனம் செய்துள்ளார். செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுகுறித்து அவர் சிவகங்கையில் சினிமா டப்பிங்குக்கு குரல் கொடுத்தால்போதும் என விஜய் நினைக்கிறார்.
அது தவறானது. ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் பாஜக அழுத்தம் இருக்கிறதா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நிறைந்த சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்வது கேலிக்கூத்தாக உள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்பது பழைய சுரைக்காய். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். மத்திய அரசு நிதி தராவிட்டாலும், மக்களுக்கான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது எனக் கூறினார்.