கார்த்திக் சபேஷ்

 
தமிழகம்

தேவா குடும்பத்தில் இன்னொரு சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

செய்திப்பிரிவு

சென்னை: இசையமைப்​பாளர் தேவாவின் தம்​பியும் மறைந்த இசை அமைப்​பாளருமான சபேஷின் மக​ன் நடிகர் கார்த்​திக் சபேஷ், உடல்​ நலக்​குறைவால் நேற்று காலமானார்.

அவருக்கு வயது 37. இசையமைப்​பாளர் தேவா, கடந்த 17-ம் தேதி மாரடைப்​பால் சென்​னை​யில் காலமானார். அவர் மறைந்த சோகத்​தி​லிருந்து அவரது குடும்​பம் மீள்​வதற்​குள் அவருடைய சகோ​தரர் சபேஷின் மக​னும் நடிகரு​மான கார்த்​திக் சபேஷும் உயி​ரிழந்​திருப்​பது அவர்​கள் உறவினர்​கள் மத்​தி​யில் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

கார்த்​திக் சபேஷ், வல்​ல​வன், பட்​டத்து யானை, உதயம் என்.எச்.4, பர்மா உள்​ளிட்​டப் படங்​களில் நடித்​துள்​ளார். அவரது உடல், திரை​யுல​கினர் அஞ்​சலிக்​காக சென்னை வளசர​வாக்​கத்​தில் உள்ள அவரது இல்லத்​தில் வைக்​கப்​பட்​டது. பின்​னர் நேற்று மாலை அவருடைய இறுதிச்​சடங்கு நடை பெற்​றது.

மறைந்த கார்த்​திக் சபேஷுக்கு ரம்யா என்ற மனைவியும், பிரிஷானிதாரா மற்​றும் ஹைரானிதாரா என்ற 2 மகள்​களும் உள்​ளனர். கடந்த ஆண்டு அக்.23-ம் தேதி கார்த்​திக் சபேஷின் தந்​தையான இசையமைப்​பாளர் சபேஷ் காலமானார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT