தமிழகம்

புதிய ஆட்டோவுக்கு கூடுதல் விலை வசூலித்தால் நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: போக்​கு​வரத்து ஆணை​யர் சிஜி தாமஸ் வைத்​யன் அனைத்து வட்​டார போக்​கு​வரத்து அலு​வலர்​களுக்கு எழு​திய கடிதம்: புதிய ஆட்​டோரிக்சா வாகன விற்​பனை​யின்​ போது வாகன விற்​பனை முகவர்​கள் வாடிக்​கை​யாளர்​களிடம் வாகன விலையை விட கூடு​தலான கட்​ட​ணங்​கள் வசூலிப்​ப​தாக அதிக புகார்​கள் பெறப்​படு​கின்​றன.

எனவே, அனைத்து வாகன விற்​பனை முகவர்​களும் கட்​டாய​மாக தங்​கள் விற்​பனை மையங்​களில் வாக​னங்​களின் விற்​பனை விலையை அனை​வரும் எளி​தில் காணக்​கூடிய இடத்​தில் மாதிரி வாரி​யாக காட்​சிப்​படுத்த வேண்​டும்.

அவ்​வாறு காட்​சிப்​படுத்​தப்​படும் விலை​யில், பொருந்​தக்​கூடிய அனைத்து வரி​கள் மற்​றும் கட்​ட​ணங்​களின் விவரங்​கள் தனித்​தனி​யாகக் குறிப்​பிடப்​பட்​டிருக்க வேண்​டும். விதி​களை மீறி விற்​பனை விலையை விட கூடு​தல் தொகை வசூலிக்​கும் வாகன விற்​பனை​யாளர்​களின் வணி​கச் சான்​றின் மீது கடுமை​யான நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வணி​கச் சான்று ரத்து செய்​யப்​படும்.

இதுதொடர்​பாக கண்​காணித்​து, புகார்​கள் பெறப்​பட்​டால் மோட்​டார் வாகன சட்​டம் மற்​றும் விதி​களின் படி உடனடி​யாக நடவடிக்கை மேற்​கொள்ள அனைத்து வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வலர்​களும் அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள்​. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT