உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

 
தமிழகம்

அமலாக்கத்துறை வழக்குகளில் ஆவணங்களை பெற குற்றம்சாட்டப்பட்டோருக்கு உரிமை உண்டு: உயர் நீதிமன்றம்

செய்திப்பிரிவு

மதுரை: அமலாக்​கத்​துறை வழக்​கு​களில் நீதி​மன்ற விசா​ரணை தொடங்​கு​வதற்கு முன்பே புகார், சாட்சி வாக்​குமூலங்​கள் மற்​றும் மின்​னணுச் சான்​றுகள் உட்​பட அனைத்து ஆவணங்​களை​யும் பெறு​வதற்கு குற்​றம்​சாட்​டப்​பட்​டோருக்கு சட்​டப்​பூர்வ உரிமை உண்டு என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

திமுக முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்​ணன் மகன் ஆனந்தா ராதாகிருஷ்​ணன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறி​யிருந்​ததாவது: எங்​கள் குடும்​பத்​தினருக்கு எதிராக மதுரை சிறப்பு நீதி​மன்​றத்​தில் பண மோசடி தடுப்​புச் சட்​டத்​தின்​கீழ் அமலாக்​கத்​துறை வழக்கு தொடர்ந்​தது. இந்த வழக்​கில் என்னை 4-வது எதி​ரியாக சேர்த்​துள்​ளனர்.

வழக்​கில் அமலாக்​கத்​துறை தாக்​கல் செய்​துள்ள ஆவணங்​களின் நகல் கேட்டு மதுரை சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​தேன். என் மனுவை தள்​ளு​படி செய்து நீதிபதி உத்​தர​விட்​டார். மனுவை தள்​ளு​படி செய்த நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்து வழக்​கில் அமலாக்​கத்​துறை தாக்​கல் செய்த அனைத்து ஆவணங்​களின் நகல்​களை வழங்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் அப்​துல்​குத்​தூஸ், ரஜி​னிஷ் பதி​யில் ஆகியோர் விசா​ரித்​தனர். மனுதா​ரர் தரப்​பில், “அமலாக்​கத்​துறை வசமுள்ள ஆவணங்​களைக் கேட்டு மனுதா​ரர்​கள் தாக்​கல் செய்த மனுவை விசா​ரணை நீதி​மன்​றம் நிராகரித்​தது சட்​ட​விரோதம். அமலாக்​கத் துறை புகாருடன் தாக்​கல் செய்​யும் ஆவணங்​களை மனுதா​ரருக்கு வழங்க வேண்​டும். அமலாக்​கத் துறை​யின் வழக்கை விசா​ரணைக்கு எடுப்​ப​தற்கு முன்பு, குற்​றம் சாட்​டப்​பட்​டோருக்கு அவரது தரப்பு வாதத்தை முன்​வைக்க வாய்ப்பு வழங்க வேண்​டும் என்று பிஎன்​எஸ்எஸ் சட்​டத்​தில் கூறப்​பட்​டுள்​ளது” என வாதிடப்​பட்​டது.

அதற்கு அரசு தரப்​பில், “குற்​றவியல் நீதி​மன்​றம் ஒரு வழக்​கில் கவனத்​துக்கு எடுப்​ப​தற்கு முந்​தைய நிலை​யில், ஆவணங்​களைப் பெற மனுதா​ரர்​களுக்கு உரிமை இல்லை. நீதி​மன்​றம் விசா​ரணைக்கு எடுத்த பிறகே ஆவணங்​களைப் பெறும் உரிமையை மனுதா​ரர்​கள் பெறுகின்​றனர். இத​னால். மனுதா​ரரின் கோரிக்கை நிராகரிக்​கப்​பட்​டது” என தெரி​விக்​கப்​பட்​டது.

இருதரப்பு வாதங்​களை கேட்ட பிறகு நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தரவு: மனுதா​ரர் மீதான வழக்கு, பணமோசடி தடுப்​புச் சட்​டம் 2002-ன் கீழ் அமலாக்​கத் துறை​யால் சிறப்பு நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்​டுள்​ளது. ஒரு வழக்​கில் குற்​றப்​பத்​தி​ரி​கையை விசா​ரணைக்கு எடுக்​கும் முன்​பாக குற்​றம்​சாட்​டப்​பட்​டோருக்கு தனது தரப்பு வாதத்தை முன்​வைக்க வாய்ப்பு வழங்க வேண்​டும். இதை பின்​பற்​றத் தவறினால் பணமோசடி தொடர்​பான வழக்​கு​களின் முழு நட​வடிக்​கையும் செல்​லாத​தாகி​விடும்.

பிஎம்​எல்ஏ வழக்​கு​களில் குற்​றம்​சாட்​டப்​பட்​டோருக்கு விசா​ரணை தொடங்​கும் முன்பே ஆவணங்​கள் வழங்​கப்​பட்ட உதா​ரணங்​கள் உள்​ளன. மனுதா​ரருக்கு மட்​டும் ஆவணங்​களை வழங்க மறுக்​கப்​பட்​டுள்​ளது. விசா​ரணைக்​கான வாய்ப்பு என்​பது வெறும் வெற்று சம்​பிரதாயம் அல்ல. எதிர் தரப்​பினருக்கு எதிராகப் பயன்​படுத்​தப்​பட உள்ள அனைத்​துச் சான்​றுகளை​யும் ஆவணங்​களை​யும் வெளி​யிட வேண்​டும். ஆவணங்​கள் இல்லை என்​றால் குற்​றச்​சாட்டை மறுக்​கவோ, குறுக்கு விசா​ரணை செய்​யவோ வாய்ப்​பில்​லாமல் போகும்.

குற்ற வழக்​கு​கள் மற்​றும் பிஎன்​எஸ்எஸ், பிஎம்​எல்ஏ வழக்​கு​களில் குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வருக்கு புகார், சாட்​சிகளின் வாக்​குமூலங்​கள் மற்​றும் மின்​னணுச் சான்​றுகள் உட்​பட தங்​களுக்கு எதிராகப் பயன்​படுத்​தப்​பட உள்ள அனைத்து ஆதா​ரங்​களை​யும் அணுகு​வதற்கு சட்​டப்​பூர்வ உரிமை உண்டு. மேலும், அரசுத் தரப்பு குற்​றச்​சாட்டை நிரூபிக்​கப் பயன்​படுத்​தாத ஆவணங்​கள் வைத்​திருந்​தா​லும் அது குற்​றம்​சாட்​டப்​பட்​டோருக்கு சாதக​மாக இருக்​கும்​பட்​சத்​தில் அந்த ஆவணங்​களை​யும் வழங்க வேண்​டும்.

குற்​றவியல் சட்ட வழக்​கு​களில் குற்​றம்​சாட்​டப்​பட்​டோர் மீதான குற்​றச்​சாட்​டுகளை அரசுத் தரப்​புதான் சந்​தேகத்​துக்கு இட​மின்றி நிரூபிக்க வேண்​டும். ஆனால், பிஎம்​எல்ஏ சட்​டத்​தில் அந்த சுமை குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர் மீது சுமத்​தப்​பட்​டுள்​ளது. இத​னால் அனைத்து ஆவணங்​களின் நகல்​களை​யும் வழங்க வேண்​டும். இது பிஎம்​எல்ஏ சட்​டத்​தின்​கீழ் ஆதா​ரமற்ற, பழிவாங்​கும் நோக்​கத்​துடன் கூடிய, திட்​ட​மிட்டு புனையப்​பட்ட அல்​லது துன்​புறுத்​தும் வகை​யில் வழக்​கு​கள் பதிவு செய்​வதைத் தவிர்க்க உதவும்.

இத​னால் மனுதா​ரருக்கு ஆவணங்​களை வழங்க மறுத்து மதுரை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது. மனுதா​ரருக்கு வழக்​கில் ஆதா​ர​மாகச் சமர்​பிக்​கப்​பட்​டுள்ள அனைத்து ஆவணங்​களின் நகல்​களை​யும் 4 வாரத்​தில் வழங்க வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில் கூறியுள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT