தமிழகம்

கோட்டயம், செங்கண்ணூர், எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சபரிமலை பக்தர்கள் தங்க வசதி

தெற்கு ரயில்வே சார்பில் 204 சிறப்பு ரயில் சேவைகளும் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சபரிமலை பக்​தர்​களின் வசதிக்​காக 204 சிறப்பு ரயில் சேவை​களை தெற்கு ரயில்வே அறி​வித்​துள்ளது. கோட்​டயம், செங்​கண்​ணூர், எர்​ணாகுளம் ரயில் நிலையங்​களில் தங்​கு​வதற்​கான வசதி​களும் செய்​யப்​பட்​டுள்ளன.

சபரிமலை ஐயப்​பன் கோயிலுக்​குச் செல்​லும் பக்​தர்​களின் வசதிக்​காக தெற்கு ரயில்வே ஏற்​பாடுகளைச் செய்​துள்​ளது. நெரிசலைத் தவிர்க்க, அதிக அளவில் சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. சென்னை - கொல்​லம், திரு​வனந்​தபுரம் - மங்​களூரு, பன்​வெல் - கோட்​டயம், விசாகப்​பட்​டினம் - கொல்​லம், ஹைத​ரா​பாத் - கொல்​லம், விஜய​வாடா - கோட்​டயம் ஆகிய வழித்​தடங்​களில் இந்த ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. நவ.23-ம் தேதி 204 சிறப்பு ரயில்கள் அறி​விக்​கப்​பட்​டுள்​ளன. பயணிகளின் தேவைக்​கேற்ப மேலும் பல ரயில்​கள் இயக்​கப்​பட உள்​ளன.

பக்​தர்​கள் அதி​கம் வந்து செல்​லும் கோட்​டயம், செங்​கண்​ணூர், எர்​ணாகுளம் ரயில் நிலை​யங்​களில் சிறப்பு ஏற்​பாடுகள் செய்​யப்​பட்​டுள்​ளன. கோட்​டயத்​தின் பிரதான நுழைவாயில் அருகே 900 பக்​தர்​கள் தங்​கும் வகை​யில் 20 கழிப்​பறைகள், குளியலறைகள், உடைமை​கள் வைக்​கும் அறை, உணவருந்​தும் கூடங்​கள், செல்​போன் சார்​ஜிங் வசதி​களு​டன் 3 மாடி பக்​தர்​கள் சேவை மையம் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

செங்​கண்​ணூரில் 600 பயணிகள் தங்​கும் வகை​யில் 3 விசாலமான தங்​குமிடங்​கள், புதிய சைவ உணவகம் அமைக்​கப்​பட்​டுள்​ளன. எர்​ணாகுளம் சந்​திப்பு நிலை​யத்​தில் ஏசி காத்​திருப்பு அறைகள், ஓய்​வறைகள், உணவகங்​கள், தற்​காலிக கழிப்​பறை வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

கோட்​டயம், செங்​கண்​ணூர் ரயில் நிலை​யங்​களில் ஆர்​பிஎஃப் போலீ​ஸாரின் உதவி மையங்​கள், கூடுதல் டிக்​கெட் கவுன்ட்​டர்​கள் திறக்​கப்​பட்​டுள்​ளன. பக்​தர்​களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, கன்​னடம் தெரிந்த ரயில்வே ஊழியர்​கள் பணி​யமர்த்​தப்​பட்​டுள்​ளனர். பெண் காவலர்​கள் உள்​பட கூடுதல் ஆர்​பிஎஃப் போலீ​ஸார் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT