தமிழகம்

துணைவேந்தர் நியமிக்கப்படாமல் ஆதரவற்ற நிலையில் 14 பல்கலைக்கழகங்கள்: ஆளுநர் நடவடிக்கை எடுக்க ஏபிவிபி மனு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் 14 முக்​கிய பல்​கலைக்​கழகங்​கள் துணைவேந்தர்கள் இன்​றி, ஆதர​வற்ற நிலை​யில் கிடக்​கின்​றன.

இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகரிடம், அகில பாரத வித்​தி​யார்த்தி பரிஷத் (ஏபி​விபி) மாணவர் அமைப்பு வலி​யுறுத்​தி​யுள்​ளது.

          

இதுதொடர்​பாக ஆளுநரிடம் ஏபி​விபி அமைப்​பின் மத்​திய செய​லாக்க குழு உறுப்​பினர் வேதாஞ்​சலி உள்​ளிட்ட நிர்​வாகி​கள் அளித்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக அரசின் திட்​ட​மிட்ட சதி​யால் தமிழகத்​தில் உள்ள பல்​கலைக்​கழகங்​கள் இன்று ஆளுங்​கட்​சி​யின் சித்​தாந்​தக் கூடாரங்​களாக​வும், பாலியல் குற்​ற​வாளி​களின் பாது​காப்​பான புகலிட​மாக​வும் சீரழிந்​துள்​ளன.

அண்ணா பல்​கலை. பேராசிரியர் மீதான பாலியல் குற்​றச்​சாட்​டு, பனிப்​பாறை​யின் ஒரு நுனி மட்​டுமே. திமுக பின்​னணி கொண்ட பாலியல் குற்​ற​வாளி​யின் குற்​றங்​களை, பல்​கலை. நிர்​வாகங்​களே மூடிமறைத்​துப் பாது​காக்​கின்​றன. மாணவி​களுக்கு இங்கு பாது​காப்​பில்​லை.

ஆளுநர் உடனான முரண்​பாட்​டால் 14 முக்​கிய பல்​கலைக்​கழகங்​கள் துணைவேந்​தர்​கள் இன்​றி, ஆதர​வற்ற நிலை​யில் கிடக்​கின்​றன. திமுக அரசு திட்​ட​மிட்​டு, நிதியை முடக்கியுள்ளது.

ஆளுநர் இதை இரும்​புக் கரம் கொண்டு அடக்க வேண்​டும். இந்த போக்கை தமிழக அரசு மாற்​றிக் கொள்​ளா​விட்​டால் மாணவர் சமு​தா​யத்தை திரட்டி கோட்​டையை முற்​றுகை​யிடும் போ​ராட்​டத்தை முன்​னெடுப்​போம்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT