தமிழகம்

கேரளாவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த பிஎஃப்ஐ நிர்வாகி கைது

தேசிய புல​னாய்வு முகமை நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: கேரள மாநிலம் பாலக்​காட்​டில் ஆர்​எஸ்​எஸ் பிர​முகர் சீனி​வாசன் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில், கடந்த 4 ஆண்​டு​களாகத் தலைமறை​வாக இருந்த பாப்​புலர் ஃப்​ரண்ட் ஆஃப் இந்​தியா (பிஎஃப்ஐ) அமைப்​பின் முக்​கிய நிர்​வாகியைத் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) அதி​காரி​கள் டெல்லி விமான நிலை​யத்​தில் கைது செய்​தனர்.

கேரள மாநிலம் பாலக்​காடு மாவட்​டம் மேல்​முரி பகு​தி​யைச் சேர்ந்​தவர் சீனி​வாசன். ஆர்​எஸ்​எஸ் அமைப்​பைச் சேர்ந்த, இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்​ரல் 16-ம் தேதி 6 பேர் கொண்ட கும்​பலால் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்​டார். இந்த வழக்கை முதலில் கேரள போலீ​ஸார் விசா​ரித்​து, பிஎஃப்ஐ உள்​ளிட்ட பல்​வேறு அமைப்​பைச் சேர்ந்த 20-க்​கும் மேற்​பட்​டோரைக் கைது செய்​தனர். பின்​னர், வழக்​கின் தீவிரத்​தைக் கருதி இது தேசிய புல​னாய்வு முகமைக்கு மாற்​றப்​பட்​டது.

என்ஐஏ விசா​ரணை​யில், இந்​தக் கொலைச் சதி​யில் முக்​கிய மூளை​யாகச் செயல்​பட்​ட​வர் பிஎஃப்ஐ அமைப்​பின் பாலக்​காடு மாவட்​டத் தலை​வ​ராக இருந்த முஹமது அலி என தெரிய​வந்​தது.

இவர் கொலைக்​குத் திட்​ட​மிட்​டது மட்​டுமின்​றி, தாக்​குதலில் ஈடு​பட்​ட​வர்​களுக்கு ஆதரவு அளித்​த​தாக​வும் கூறப்​படு​கிறது. இவர் மீது ஐபிசி மற்​றும் சட்​ட​விரோத நடவடிக்​கைகள் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இதற்​கிடையே, முஹமது அலி வெளி​நாட்​டுக்​குத் தப்​பிச் சென்​ற​தால், அவரைப் பற்​றித் தகவல் கொடுப்​பவர்​களுக்கு ரூ.3 லட்​சம் சன்​மானம் அறிவிக்​கப்​பட்​டதுடன், இன்​டர்​போல் மூலம் ‘ரெட் நோட்​டீஸ்’ பிறப்​பிக்​கப்​பட்​டிருந்தது.

இந்​நிலை​யில், முஹமது அலி சவுதி அரேபி​யா​விலிருந்து விமானம் மூலம் டெல்லி வரு​வ​தாக என்ஐஏ அதி​காரி​களுக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

இதனடிப்​படை​யில், டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டிருந்த அதி​காரி​கள், அவர் வந்​திறங்​கியதும் அவரைச் சுற்றி வளைத்​துக் கைது செய்​தனர். கைது செய்​யப்​பட்ட முஹமது அலி​யிடம் நடத்​திய விசா​ரணை​யில் அதிர்ச்சி தகவல் வெளி​யாகி உள்​ளது.

கொலை சம்​பவத்​துக்கு பிறகு, கடந்த நான்கு ஆண்​டு​களாக அவர் சவுதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் பதுங்​கி​யிருந்​ததும், 2047-ம் ஆண்​டுக்​குள் இந்​தி​யா​வில் இஸ்​லாமிய ஆட்​சியை நிலை​நாட்​டும் நோக்​கத்​துடன் பிஎஃப்ஐ அமைப்பு செயல்​பட்டு வந்​ததும் விசா​ரணை​யில் தெரிய​வந்தது.

மேலும், இதற்​காக அந்த அமைப்​பினருக்கு ‘யோகா மற்​றும் உடல் பயிற்​சி’ என்ற பெயரில் ஆயுதப் பயிற்​சிகள் வழங்​கப்​பட்டு வந்​ததும், உளவு சேகரிப்​ப​தற்​காக ‘ரிப்​போர்ட்​டர்ஸ் விங்’ மற்​றும் தாக்​குதல்​களை நடத்​து​வதற்​காக ‘சர்​வீஸ் டீம்’ போன்ற பிரத்​யேகப் பிரிவு​களை உரு​வாக்​கிச் செயல்​பட்டு வந்​தும் விசா​ரணை​யில் வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. சீனி​வாசன் கொலை வழக்​கில் முஹமது அலி கைதோடு சேர்த்து, இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்​ட​வர்​களின் எண்ணிக்கை 67-ஆக உயர்ந்​து​ள்ளது. முஹமது அலி​யிடம்​ அதிகாரி​கள்​ தொடர்ந்​து தீவிர வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT