தமிழகம்

வடசென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: தனியார் நிறுவன பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பொதுமக்கள்

செய்திப்பிரிவு

சென்னை: மாதவரம் பால் பண்​ணை​யில் தொழிலா​ளர்​கள் பற்​றக்​குறை​யால், வடசென்​னை​யில் ஆவின் பால் விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டது.

மாதவரம் பால் பண்​ணை​யில் இருந்து வடசென்னை பகுதி முழு​வதும் ஆவின் பால் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது.

வடசென்னை பகு​தி​யில் கடந்த சில நாட்​களாக, ஆவின் பால் விநி​யோகம் குறை​வாக இருந்​த​தால், பொது​மக்​களுக்கு தேவை​யான அளவு பால் கிடைக்​க​வில்​லை. கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடு​வ​தால், பொது​மக்​கள் தனி​யார் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்​டிய நிலை ஏற்​படு​கிறது.

          

இந்​நிலை​யில், வடசென்னை பகு​தி​யில் ஆவின் பால் விநி​யோகம் நேற்று கடுமை​யாக பாதிப்​படைந்​தது. பெரம்​பூர், திருவிக நகர், வியாசர்​பாடி, கொளத்​தூர், கொடுங்​கையூர், கொருக்​குப்​பேட்டை உள்​ளிட்ட வடசென்​னை​யின் பல பகு​தி​களில் ஆவின் பால் விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டது. இதனால், ஆவின் பால் கிடைக்​காமல் பொது​மக்​கள் சிரமப்​பட்​டனர்.

குறைந்த அளவிலேயே பால் விநி​யோகம் செய்​யப்​பட்​ட​தால், கடைகளுக்கு குறைந்த எண்​ணிக்​கையி​லான பால் பாக்​கெட்​கள் வழங்​கப்​பட்​ட​தாக பால் விநி​யோகஸ்​தர்​கள் தெரி​வித்​தனர்.

மாதவரம் பால் பண்​ணை​யில் கடந்த சில நாட்​களாக நீடிக்​கும் ஆவின் பால் தட்​டுப்​பாட்​டுக்​கு, சரி​யான நடவடிக்கை எடுக்​காமல் போனதே இந்த பாதிப்​புக்கு காரணம் என, தமிழக பால் முகவர்​கள் நலச்​சங்க தலை​வர் பொன்​னு​சாமி தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்​து, அவர் மேலும் கூறிய​தாவது: மாதவரம் பால் பண்​ணை​யில் தொழிலா​ளர்​களுக்​கான ஒப்​பந்​தம் கடந்த மார்ச் 31-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது.

இதையடுத்​து, சோழிங்​கநல்​லூர் பால் பண்​ணை​யில் தொழிலா​ளர்​களுக்​கான ஒப்​பந்​தம் எடுத்​துள்ள ஒப்​பந்​த​தா​ரருக்கே மாதவரம் பால் பண்​ணைக்​கான ஒப்​பந்​தம் சேர்த்து வழங்​கப்​பட்​டுள்​ளது.

அவ்​வாறு ஒப்​பந்​தம் பெற்ற ஒப்​பந்​த​தா​ர​ரால் மாதவரம் பால் பண்​ணை​யில் பணிக்கு தேவை​யான சுமார் 50-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​களை அனுப்ப இயல​வில்​லை.

வெறும் 8 பேரை மட்​டுமே அனுப்ப முடிந்​தது. கடந்த ஒரு வார காலத்​துக்​கும் மேலாக, ஒப்​பந்த தொழிலா​ளர்​கள் பணிக்கு வராத​தால் வெறும் 8 தொழிலா​ளர்​களை கொண்டு மாதவரம் பால் பண்ணை இயங்கி வந்தது.

இதனால், பால் முகவர்​களுக்​கும், பொது​மக்​களுக்​கும் ஆவின் பாலை தங்​குதடை​யின்றி விநி​யோகம் செய்ய வேண்​டும் என்ற நோக்​கில் மொத்த விநி​யோகஸ்​தர்​களின் வாகன ஓட்​டுநர்​களும், வாகன உதவி​யாளர்​களும் பால் பாக்​கெட்​டு​களை பால் டப்​பு​களில் அடுக்கி வாக​னங்​களில் ஏற்​றும் பணி​களை தொடர்ந்து செய்​தனர்.

ஆனால், தொழிலா​ளர்​கள் பற்​றாகுறையை சரிசெய்ய ஆவின் நிர்​வாகம் தரப்​பிலிருந்​தும், ஒப்​பந்​த​தா​ரர் தரப்​பிலிருந்​தும் உரிய நடவடிக்கை எடுக்​க​வில்​லை. அதே​நேரத்​தில், வாகன ஓட்​டுநர்​கள், வாகன உதவி​யாளர்​கள் இப்​பணி​யில் தொடர்ந்து ஈடுபட முடிய​வில்லை.

இதையடுத்​து, மாதவரம் பால் பண்​ணை​யில் இருந்து விநி​யோகம் செய்​யப்பட வேண்​டிய ஆவின் பால் விநி​யோகம் சுமார் 60 சதவீதத்​துக்​கும் மேல் முடங்​கியது.

இதனால், ஆவின் பால் கிடைக்​காமல் வடசென்னை பகுதி பொது​மக்​களும் கடும் சிரமத்​துக்கு உள்​ளாகி​யுள்​ளனர். மாதவரம் பால் பண்​ணை​யில்​ நில​வும்​ ஒப்​பந்​த தொழிலா​ளர்​கள்​ பிரச்​னைக்​கு உடனடி​யாக தீர்​வு காண வேண்​டும்​. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT