தமிழகம்

“ஸ்டாலின் எங்களுக்கு அங்கீகாரம் கொடுப்பார்” - ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் நம்பிக்கை

செய்திப்பிரிவு

“​தி​முக-வுடன் நல்ல நட்​புறவு தொடர்ந்து கொண்​டிருப்​ப​தால் திமுக தலை​வர் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஆம் ஆத்மி கட்​சிக்கு அங்​கீ​காரம் கொடுப்​பார் என எதிர்​பார்க்​கி​றோம்” என ஆம் ஆத்மி கட்​சி​யின் மாநிலத் தலை​வர் வசீகரன் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி டெல்​லி​யில் ஆம் ஆத்மி கட்​சி​யின் தேசிய தலை​வர்​களு​டன் கலந்து ஆலோ​சனை நடத்தி விட்டு நேற்று சென்னை திரும்​பிய வசீகரன் விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஆம் ஆத்மி கட்சி நிச்​சய​மாக 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிடும். எங்​களை அழைத்து திமுக பேச்​சு​வார்த்தை நடத்​தி​யிருக்​கிறது.

          

திமுக​வுடன் நல்ல நட்​புறவு தொடர்​வ​தால் திமுக தலை​வர், முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஆம் ஆத்மி கட்​சிக்கு அங்​கீ​காரம் கொடுப்​பார் என எதிர்​பார்க்​கி​றோம். தென்​னிந்​தி​யா​வில் ஆம் ஆத்மி கட்​சிக்கு தமி​ழ​கம் மூலம் ஒரு வாய்ப்பு அமைய உள்​ளது. அதை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஏற்​படுத்தி தரு​வார் என்ற நம்​பிக்கை இருக்​கிறது.

எங்​களுக்கு சீட் ஒதுக்​கப்​பட்​டால், எங்​களு​டையை துடைப்​பம் சின்​னத்​திலேயே போட்​டி​யிடு​வோம். தமி​ழ​கத்​தில் ஆம் ஆத்மி போட்​டி​யிட்​டால் அர்​விந்த் கேஜ்ரி​வால், பஞ்​சாப் முதல்​வர் பகவந்த்​மான் உள்​ளிட்​டோர் பிர​சா​ரம் செய்​வதற்கு வரு​வார்​கள். இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகளுக்கு இடையே பல கருத்து முரண்​பாடு​கள் இருந்​தா​லும், நாட்டு மக்​களை காப்​பாற்ற வேண்​டும்.

பாஜக அனைத்து மாநிலங்​களி​லும் கூட்​டணி கட்​சிகளை விழுங்கி கொண்டு இருக்​கிறது. தமி​ழ​கத்​தி​லும் அதை செய்ய ஆரம்​பித்து விட்​டனர். இதை தடுக்க வேண்​டும். அரசி​யல் என்​பது சுலப​மானது அல்ல. யாரும் எடுத்​தவுடன் முதல்​வ​ராகி விட​முடி​யாது. அரசி​யல் எவ்​வளவு கஷ்ட​மானது என்​பது தவெக தலை​வர் விஜய் உள்​ளிட்​டோருக்​கும் தெரிய வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT