தமிழகம்

சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் 980 தீயணைப்பு வீரர்கள்

10 நிமிடங்களில் சம்பவ இடத்துக்குச் செல்ல உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் வடகிழக்கு பருவமழையை எதிர்​கொள்ள 980 தீயணைப்பு மற்​றும் மீட்​புப் படை வீரர்​கள் தயார் நிலை​யில் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

சென்​னை​யில் உள்ள 43 தீயணைப்பு நிலை​யங்​கள் மட்​டுமின்றி, வெள்​ளப் பாதிப்பு ஏற்​படக்​கூடிய 15 முக்​கிய இடங்​களி​லும் வீரர்​கள் கூடுதலாக நிறுத்​தப்​பட்​டுள்​ளனர்.

தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கி​யுள்ள நிலை​யில், பல்​வேறு பகுதி​களில் மழை பெய்து வரு​கிறது. சென்​னை​யிலும் இரு தினங்​களாக பல்​வேறு இடங்​களில் பரவலாக மித​மான மழை பெய்​தது.

இத​னால் நகரின் சில சாலைகள் மற்​றும் குடி​யிருப்​புப் பகுதி​களில் மழைநீர் தேங்​கியது. இதனை அகற்​றும் பணி​யில் மாநக​ராட்சி ஊழியர்​கள் தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

மழை வெள்​ளத்​தால் பாதிக்​கப்​படும் பொது​மக்​களுக்கு உடனடி​யாக உதவும் வகை​யில், தமிழ்​நாடு தீயணைப்பு மற்​றும் மீட்​புப் பணிகள் துறை சார்​பில் சென்​னை​யில் முன்​னெச்​சரிக்கை ஏற்​பாடுகள் செய்​யப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில் உள்ள 43 தீயணைப்பு நிலை​யங்​களில் வீரர்​கள் தயார் நிலை​யில் உள்​ளனர்.

இது​த​விர, வெள்​ளப் பாதிப்பு ஏற்​பட வாய்ப்​புள்ள தாழ்​வான பகுதி​களி​லும் கூடுதலாக வீரர்​கள் நிறுத்​தப்​பட்​டுள்​ளனர். ரெட்​டேரி சந்​திப்பு, பேசின் பாலம், மின்ட், செம்​பியம் உள்​ளிட்ட 15 முக்​கிய இடங்​களில் தீயணைப்பு மற்​றும் மீட்​புப் படை​யினர் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

மழைநீர் தேங்​குதல், வெள்​ளத்​தில் சிக்​கிய​வர்​களை மீட்​பது உள்​ளிட்ட அவசரப் பணிகளுக்​காக இந்த ஏற்​பாடுகள் செய்​யப்​பட்​டுள்​ளன. சென்​னை​யில் ஏற்​கெனவே 850 தீயணைப்பு வீரர்​கள் பணி​யில் உள்​ளனர்.

பரு​வ​மழையின் தீவிரம் அதி​கரிக்​கக்​கூடும் என்ற முன்​னெச்​சரிக்​கை​யின் அடிப்​படை​யில், பிற மாவட்​டங்​களில் இருந்து கூடுதலாக 130 தீயணைப்பு வீரர்​கள் சென்​னைக்கு வரவழைக்​கப்​பட்​டுள்​ளனர். இதன் மூலம் மொத்​தம் 980 வீரர்​கள் மழைக்​கால மீட்​புப் பணிகளுக்​காகத் தயார் நிலை​யில் உள்​ளனர்.

வெள்​ளப் பாதிப்​பு​கள் தொடர்​பாக பொது​மக்​களிட​மிருந்து வரும் அவசர அழைப்​பு​களுக்கு விரைந்து நட​வடிக்கை எடுக்​கவும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, அவசர அழைப்பு கிடைத்​ததும் சம்​பவ இடத்​துக்கு 10 முதல் 15 நிமிடங்​களுக்​குள் தீயணைப்பு மற்​றும் மீட்​புப் படை​யினர் சென்று சேரும் வகை​யில் செயல்​பட வேண்​டும் என்று தமிழ்​நாடு தீயணைப்பு மற்​றும் மீட்​புப் பணிகள் துறை டிஜிபி வெங்​கடராமன் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT