தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 4-ம் தேதி வரை இந்தப் பணிகள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தது.
அதன்படி, வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் அச்சிடப்பட்ட வாக்காளர் விபர படிவத்தை வாக்குச் சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.
பணிகள் முடிவதற்கான டிசம்பர் 4-ம் தேதி நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை 95.78 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சில நாட்களில் 100 சதவீத படிவங்கள் வழங்கப்பட்டு விடும் என்றும் டிசம்பர் 4-ம் தேதிக்குள் எஸ்ஐஆர் திருத்தப் பணிகள் முடிவடைந்துவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.