தமிழகம்

மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 90 லட்சம் பேர் பயணம்

செய்திப்பிரிவு

சென்னை: மெட்ரோ ரயி​லில் மே மாதத்​தில் 90.14 லட்​சம் பேர் பயணம் செய்​துள்​ளனர். சென்​னை​யில் மெட்ரோ ரயில்​களில் நடப்​பாண்​டில் மே மாதத்​தில் 90 லட்​சத்து 14 ஆயிரத்து 959 பேர் பயணம் செய்​துள்​ளனர்.

இம்​மாதத்​தில் அதி​கபட்​ச​மாக, மே 18-ம் தேதி 3 லட்​சத்து 54 ஆயிரத்து 559 பயணி​கள் மெட்ரோ ரயில்​களில் பயணம் செய்​துள்​ளனர். சிங்​கார சென்னை அட்​டையை பயன்​படுத்தி 42 லட்​சத்து 51 ஆயிரத்து 729 நபர்​களும், மெட்ரோ பயண அட்​டைகளை பயன்​படுத்தி 1,863 பேரும், ஒற்றை பயண பேப்​பர் க்யூஆர் பயன்​படுத்தி 19 லட்​சத்து 76 ஆயிரத்து 230 பேரும், ஆன்​லைன் க்யூஆர் குறி​யீடு பயணச்​சீட்டு முறையைப் பயன்​படுத்தி 22 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட நபர்​களும் மெட்ரோ ரயில்​களில் பயணம் செய்​துள்​ளனர்.

டிஜிட்​டல் எஸ்​.​வி.பி. க்யுஆர் குறி​யீடு பயணச்​சீட்​டு, வாட்​ஸ்​-அப் மற்​றும் சிங்​கார சென்னை அட்டை போன்ற பயணச் சீட்​டு​களை பயன்​படுத்தி மெட்ரோ ரயில்​களில் பயணிப்​பவர்​களுக்கு 20 சதவீதம் கட்​ட​ணத் தள்​ளு​படி வழங்​கப்​படு​கிறது.

மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் உள்ள பயணச்​சீட்டு கவுன்ட்​டர்​களில் வாங்​கப்​படும் ஒற்​றைப் பயணத்​துக்​கான காகித க்யூஆர் பயணச் சீட்​டு​களுக்கு இந்​தத் தள்​ளு​படி கிடை​யாது. இத்​தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT