கோப்புப் படம்

 
தமிழகம்

கிராமப்புற பள்ளிகளில் தூய்மைப் பணிக்கு ரூ.87 கோடி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் ஊராட்சி ஒன்​றியப் பள்​ளி​கள், கிராமப்​புற அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்​டில் கழிப்​பறை மற்​றும் தூய்​மைப் பணி​களுக்கு ரூ.87 கோடி ஒப்​புதல் வழங்கி தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக ஊரக வளர்ச்​சி, ஊராட்​சித் துறை செயலர் வெளி​யிட்​டுள்ள அரசாணை விவரம்: ஊராட்சி ஒன்​றியப் பள்ளிகள் மற்​றும் கிராமப்​புறங்​களில் அமைந்​துள்ள அரசுப் பள்​ளி​களில் கழிப்​பறை பராமரிப்​பு, வகுப்​பறை மற்​றும் பள்ளி வளாக தூய்​மைப் பணி​களுக்​கும், நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்​டில் அப்​பள்​ளி​களுக்கு தேவை​யான தூய்​மைப் பணிக்​கான பொருட்​கள் வாங்​கு​வதற்​கும் ரூ.86.94 கோடிக்கு ஒப்​புதல் வழங்​கு​மாறு அரசுக்கு ஊரக வளர்ச்சி ஆணை​யர் கோரிக்கை விடுத்​தார்.

அதை ஏற்​று, ஊராட்சி ஒன்​றியப் பள்​ளி​கள் மற்​றும் கிராமப்​புற அரசுப் பள்​ளி​களில் மேற்​கண்ட பணி​களுக்​காக மாநில நிதிக் குழு மானி​யத்​தின்​ கீழ் ரூ.86.94 கோடிக்கு அரசு ஒப்​புதல் வழங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT