தமிழகம்

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய வந்த விவசாயிகள் உள்ளிட்ட 80 பேர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் க​னிம வளக் கொள்​ளையை மாவட்ட நிர்​வாகம் தடுக்​கத் தவறிய​தாகக் கூறி திருப்​பூர் நீதி​மன்​றத்​தில் சரண் அடைய முயன்ற விவசாயிகள், சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் 80 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

திருப்​பூர் மாவட்​டம் பெருந்​தொழு​வு, கத்​தாங்​கன்​னி, நாச்​சி​பாளை​யம் ஆகிய பகு​தி​களில் செயல்​பட்டு வரும் தார் தொழிற்​சாலைகள், ரெடிமிக்ஸ் ஆலைகள், கல் குவாரி​களில் அனு​ம​திக்​கப்​பட்ட அளவைக் காட்​டிலும் பல மடங்கு கனிம வளங்​கள் வெட்டி எடுக்​கப்​பட்டு கடத்​தப்​படு​வ​தாகப் புகார் எழுந்​துள்​ளது.

          

இதனால் பல கோடி செல​வில் போடப்​பட்​டுள்ள தார்​சாலைகள் சேதமடைவ​தாகக் கூறி அப்​பகுதி பொது​மக்​கள், விவசாயிகள், சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் தொடர் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இதுதொடர்​பாக மாவட்ட நிர்​வாகத்​திடம் புகார் அளித்​தும் எந்​த​ நடவடிக்கை​யும் எடுக்​கவில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும் ஏற்​கெனவே போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்​நிலை​யில், பொது சொத்​துக்​களான சாலைகள் அழிக்​கப்​படு​வதைத் தடுக்​கத் தவறிய​தால் நாங்​களே குற்​ற​வாளி​கள் எனக்​கூறி பெருந்​தொழு​வு, நாச்​சி​பாளை​யம் பகு​தி​யைச் சேர்ந்த விவ​சா​யிகள், சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் திருப்​பூர் மாவட்ட நீதி​மன்​றத்​தில் சரணடைய முயன்​றனர்.

திருப்​பூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் இருந்து ஊர்​வல​மாகப் புறப்​பட்ட 80 பேரை திருப்​பூர் தெற்கு போலீ​ஸார் தடுத்து நிறுத்தி கைது செய்​தனர்.

பின்​னர் தனி​யார் திருமண மண்​டபத்​தில் தங்க வைத்​தனர். இந்த சம்​பவம் காரண​மாக மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்​பட்​டது.

SCROLL FOR NEXT