ஈரானில் இருந்து திருநெல்வேலி திரும்பிய மீனவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. | படம்: மு.லெட்சுமி அருண் |

 
தமிழகம்

ஈரானில் போர் சூழலில் சிக்கித் தவித்த நெல்லை மீனவர்கள் 80 பேர் ஊர் திரும்பினர்

மத்திய அரசும் இந்தியத் தூதரகமும் இணைந்து நடவடிக்கை

செய்திப்பிரிவு

திருநெல்​வேலி: ஈ​ரானில் நடைபெற்று வரும் போர் சூழலில் சிக்​கித் தவித்த நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மீனவர்​கள் 80 பேர் நேற்று ஊர் திரும்​பினர்.

திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி உட்பட பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த தமிழக மீனவர்​கள் ஈரான், ஓமன் போன்ற வளை​குடா நாடு​களில் தங்கி மீன்​பிடி தொழில் செய்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் நாடு​கள் சேர்ந்து ஈரான் மீது தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதனால் அங்கு ஏற்​பட்​டுள்ள பதற்ற சூழல் காரண​மாக ஈரானில் சிக்கி தவிக்​கும் தமிழக மீனவர்​கள் தங்​களை மீட்டு இந்​தி​யா​வுக்கு அழைத்து வர வீடியோ மூலம் மத்​திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்​தனர்.

          

மீனவர்​களின் உறவினர்​களும் அரசு அதி​காரி​கள் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்சி நிர்​வாகி​களிடம் தொடர்ச்​சி​யாக மனு அளித்​தனர்.

அதன் பலனாக மத்​திய அரசு மற்​றும் இந்​திய தூதரகம் இணைந்து முதல் கட்​ட​மாக ஈரானில் தவித்து வந்த 345 இந்​திய மீனவர்​களை மீட்டு சிறப்பு விமானம் மூலம் சென்​னைக்கு அழைத்து வந்​தனர்.

சென்​னை​யில் இருந்து சிறப்பு பேருந்து மூலம் மீனவர்​கள் அவர​வர் சொந்த ஊர்​களுக்கு அனுப்​பி வைக்​கப்​பட்​டனர். அதன்​படி, திருநெல்​வேலி மாவட்​டத்தை சேர்ந்த மீனவர்கள் 80 பேர் நேற்று ஊர் திரும்​பினர்.

அவர்​களுக்கு பாஜக அயலக தமிழர் பிரிவை சேர்ந்த நிர்​வாகி​கள் மற்​றும் மாவட்ட பாஜக தலை​வர் முத்து பிர​வேசம் உள்​ளிட்​டோர் வரவேற்பு அளித்தனர்.

SCROLL FOR NEXT