விபத்துக்கு காரணமான அரசுப் பேருந்து. (உள்படம்) உயிரிழந்த செல்வராஜ், இருசாயி, மணிகண்டன், நித்திஷா, ஜீவிதா. | படம்: எஸ்.குரு பிரசாத் |

 
தமிழகம்

சேலத்தில் அரசுப் பேருந்து மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

பைக், சரக்கு வாகனத்தை இடித்து தள்ளி எதிர்திசையில் பாய்ந்து விபத்து

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் அருகே கட்​டுப்​பாட்டை இழந்து ஓடிய அரசுப் பேருந்து சரக்கு வாகனம் மற்​றும் இருசக்கர வாக​னம் மீது மோதி​ய​தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயி​ரிழந்​தது பெரும் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

அரசு பேருந்து ஓட்​டுநரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். அரசுப் பேருந்து ஈரோட்​டில் இருந்து நேற்று காலை 30-க்​கும் மேற்​பட்ட பயணி​களு​டன் சேலத்​துக்கு புறப்​பட்​டது. பேருந்தை மேட்​டூர் அருகே வனவாசி பனங்​காடு பகு​தி​யைச் சேர்ந்த அய்​யந்துரை (49) என்​பவர் ஓட்​டி​னார்.

          

சேலம் அருகே உத்​தம சோழபுரம் சூளமேடு பகு​தி​யில் வந்​த​போது திடீரென ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த பேருந்து சென்​டர் மீடியனை கடந்து எதிர்​புற சாலைக்கு பாய்ந்​தது. அந்த வழியே வந்த சரக்கு வாக​னம் மற்​றும் இருசக்கர வாக​னம் மீது மோதி சர்​வீஸ் சாலை​யின் குறுக்கே சென்று நின்​றது.

இந்த விபத்​தில் இருசக்கர வாக​னத்​தில் சென்ற கொண்​டலாம்​பட்டி சந்​தன​காரன்​காடு பகு​தி​யைச் சேர்ந்த மணி​கண்​டன் (22), அவரது தாய் இரு​சாயி (60) ஆகியோர் படு​காயமடைந்து சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

மேலும், விபத்​துக்​குள்​ளான சரக்கு வாக​னத்​தில் நெய்க்​காரப்​பட்டி புத்​தூர் முதல் அக்​ரஹாரம் பகு​தி​யைச் சேர்ந்த விக்​னேஷ் என்​பவர் குடும்​பத்​துடன் மகுடஞ்​சாவடி கல்​பாரப்​பட்​டி​யில் உள்ள குலதெய்வ கோயிலுக்​குச் சென்று கொண்​டிருந்​தார். இதில் பெண்​கள், குழந்தைகள் உட்பட 11 பேர் இருந்​தனர்.

பேருந்து மோதி​ய​தில் சரக்கு வாக​னத்​தில் இருந்த செல்​வ​ராஜ் (50), அவரது உறவினர்​கள் முரு​கன், அமு​தா, 11 மாத குழந்தை ஜீவி​தா, நித்​திஷா (5) ஆகியோர் அதே இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். படு​காயமடைந்த சத்யா (25) தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

ஆட்​சி​யர் ஆய்வு

கொண்​டலாம்​பட்டி போலீ​ஸார் உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை மீட்டு பரிசோதனைக்​காக சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

பேருந்து மற்​றும் சரக்கு வாக​னத்​தில் பயணம் செய்த 30 பேர் லேசான காயம் அடைந்த நிலை​யில் அரு​கில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர்​.

சரக்கு வாகன ஓட்​டுநர் மேக​நாதன் சேலம் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். விபத்து குறித்து மாவட்ட ஆட்​சி​யர் பிருந்​தாதே​வி, காவல் துணை ஆணை​யர் கேல்​கர் சுப்​பிரமணிய பாலசந்​திரா ஆகியோர் சம்பவ இடத்​துக்​கு சென்று ஆய்வு செய்​தனர்.

விபத்து நடந்த பகு​தி​யிலுள்ள பெட்​ரோல் பங்​கில் உள்ள சிசிடி​வி-​யில் பதி​வான விபத்து காட்​சிகள் சமூக ஊடகங்​களில் வெளி​யாகி வைரலானது. இந்த வீடியோ காட்​சிகளை போலீ​ஸார் கைப்​பற்றி விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

ஓட்​டுநர் கைது

கொண்​டலாம்​பட்டி போலீ​ஸார் நடத்திய முதல்​கட்ட விசா​ரணை​யில் அரசு பேருந்து ஓட்​டுநர் அய்​யந்​துரை கவனக்​குறை​வாக பேருந்தை இயக்கி விபத்தை ஏற்​படுத்​தி​யது தெரிய​வந்​தது. இதையடுத்து அய்​யந்​துரையை போலீ​ஸார் கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இந்த விபத்து காரண​மாக சேலம்​- கோவை தேசிய நெடுஞ்​சாலை​யில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. பின்னர் விபத்​தில் சிக்​கிய வாக​னங்​கள் அப்​புறப்​படுத்​தப்​பட்டு போக்​கு​வரத்து சீர் செய்​யப்​பட்​டது.

SCROLL FOR NEXT