தமிழகம்

8 விரைவு ரயில்கள் ‘அதிவிரைவு’ ஆக மாற்றம்: ஜன.1 முதல் எண்களும் மாறுகின்றன

செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்​வேயில் இயக்​கப்​படும் 8 விரைவு ரயில்​கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட்டு, புதிய எண்​கள் அறி​விக்​கப்​பட்​டுள்​ளன.

சென்னை எழும்​பூர் - ராமேசுவரம்​ போட் மெயில் விரைவு ரயில், தாம்​பரத்​தில் இருந்து பட்​டுக்​கோட்டை வழி​யாக ராமேசுவரத்​துக்கு இயக்​கப்​படும் விரைவு ரயில், தாம்​பரம் - திருச்சி விரைவு ரயில், மும்பை லோக்​மான்ய திலக் டெர்​மினஸ் - நாகர்​கோவில் விரைவு ரயில் ஆகிய 4 ரயில்​கள், மறுமார்க்​கத்​தில் 4 ரயில்​களின் எண்​கள் மாற்​றப்​பட்​டுள்​ளன.

இந்த ரயில்​கள் அதி​விரைவு ரயில்​களாக மாற்​றப்​பட உள்​ளன. இந்த மாற்​றம் ஜன.1-ம் தேதி முதல் அமலுக்கு வரு​கிறது.தெற்கு ரயில்வே கால அட்​ட​வணை மாற்​றத்​தின் ஒரு பகுதி​யாக, இந்த 8 ரயில்​கள் மாற்​றப்​பட்​டுள்​ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT