கோப்புப்படம்

 
தமிழகம்

தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க காசிக்கு 7 சிறப்பு ரயில் சேவைகள்

செய்திப்பிரிவு

சென்னை: உத்தரப்பிரதேசம் மாநிலம் வாராணசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, 7 சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து 1,400-க்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாராணசியில் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சி டிச.2-ம் தேதி தொடங்கி, 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் பயணத்துக்கு உதவதெற்கு ரயில்வே, ஐஐடி மெட்ராஸ் மற்றும் பனராஸ் இந்து பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து 7 ரயில் சேவைகளை இயக்குகிறது.

ஏற்கெனவே 216 பேர் கொண்ட முதல் குழு நவ.29-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக பனாரஸ் சென்றது. இதையடுத்து, 264 பேர் கொண்ட 2-வது குழு சென்னை சென்ட்ரலில் இருந்து பனாரஸுக்கு நேற்றுமுன்தினம் புறப்பட்டு சென்றது.

அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – பனாரஸுக்கு 3 ரயில் சேவைகளும், கன்னியாகுமரி - பனாரஸுக்கு 2 ரயில் சேவைகளும், கோவை – பனாரஸுக்கு 2 சேவைகளும் என 7 சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் இருந்து 1,400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இத்தகவலை சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT