தமிழகம்

9 மீனவர்களில் இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்பு: புயல் எச்சரிக்கையை மீறி கடலுக்குள் சென்றதால் விசைப்படகு கவிழ்ந்தது

இந்திய கடலோர காவல்படை விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆந்​திர கடலோர பகுதி​யில் வீசிய ‘முரசு’ புயலின்போது புயல் எச்​சரிக்​கையை மீறி கடலுக்​குள் சென்​றதால் சென்னை மீனவர்​களின் விசைப்​படகு மூழ்​கிய​தாகவும், அதில் பயணித்த 9 மீனவர்​களில், இது​வரை 7 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளதாகவும் இந்​திய கடலோர காவல்​படை தெரி​வித்​துள்​ளது.

இது​தொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்​திர கடற்​கரையை குறுகிய கால இடைவெளி​யில் கடக்க இருந்த ‘அர்​னாப்’ மற்​றும் ‘முரசு’ புயல்​கள் குறித்து மீனவர்​கள் கடலுக்குச் செல்ல வேண்​டாம் என முன்​னெச்​சரிக்கை அறி​விப்​பு​கள் தொடர்ந்து வழங்​கப்​பட்டுவந்​தன. இந்​நிலை​யில், சென்னை மீன்​பிடி துறைமுகத்​திலிருந்து 9 மீனவர்​களு​டன் கடந்த அக்.29-ம் தேதி புறப்​பட்ட ‘ஸ்ரீசெங்​காளம்​மன்’ விசைப்​படகு, முரசு புயல் எச்​சரிக்​கையை தொடர்ந்து ஆந்​திர மாநிலம் நிசாம்​பட்​டினத்​தில் பாது​காப்​பாக நங்​கூரமிட்டு நிறுத்​தப்​பட்​டிருந்​தது.

ஆனால், எச்​சரிக்​கைகளை மீறி, நெல்​லூர் - நரசாபூர் இடையே முரசு புயல் கரையை தொட்ட நவ.2-ம் தேதி நள்​ளிர​வில், உச்​சக்​கட்ட கொந்​தளிப்​பான கடல் சூழலில் அப்​படகினர் நிசாம்​பட்​டினத்​தி​லிருந்து மீண்​டும் கடலுக்​குள் புறப்​பட்​டுள்​ளனர். புயலின் மையப்​பகுதி கடக்​கும் போது நில​விய தற்​காலிக அமைதி​யான சூழலை, புயல் முழு​மையாக கடந்​து​விட்​டது என மீனவர்​கள் தவறாக கருதி புறப்​பட்​டிருக்​கலாம்.

இதையடுத்து, விசைப்​படகு மாய​மானது குறித்த தகவல் நவ.3-ம் தேதி மதி​யம் 12 மணி​யளவில் கடலோரக் காவல்​படைக்கு எட்​டியது. தகவல் கிடைத்த சில மணி நேரங்​களி​லேயே சென்​னை​யில் இருந்து வான்​வழி கண்​காணிப்பு விமானம் விரைந்​ததோடு, கிருஷ்ணபட்​டினம் துறைமுகத்​தி​ லிருந்து மீட்பு கப்​பலும் உடனடி​யாக தேடுதல் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டது. தொடர்ந்து நவ.3, 4 மற்​றும் 5 ஆகிய மூன்று தினங்​களாக வான் மற்​றும் கடல்​வழி​யாக தீவிர மீட்பு நட​வடிக்​கைகள் ஒருங்​கிணைக்​கப்​பட்​டன.

இத்​தொடர் தேடுதலின் பலனாக, நவ.5-ம் தேதி காலை 9.35 மணி​யளவில் நடுக்​கடலில் மூழ்​கிய நிலை​யில் பச்சை நிறத்​திலான விசைப்​படகு கண்​டறியப்​பட்​டது.

அங்கு கடலில் மிதந்த இரு மீனவர்​களின் உடல்​களை கடலோர காவல்​படை​யின் கப்​பல் மீட்​டது. அதே தினத்​தில் கொத்​தப்​பட்​டினம் கடற்​கரையில் மேலும் 5 மீனவர்​களின் உடல்​கள் கரை ஒதுங்​கின.

இதன்படி படகில் இருந்த 9 பேரில் இது​வரை 7 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்​டுள்ள நிலை​யில், காணா​மல் போன மற்ற இரு மீனவர்​களை தேடும் பணி​யில் கடலோரக் காவல்​படை தொடர்ந்து ஈடு​பட்டு வரு​கிறது. வானிலை எச்​சரிக்​கைகளை புறக் ​கணித்து சூறாவளி காலங்​களில் கடலுக்​குள் செல்​வது பெரும் ஆபத்தை விளை​விக்​கும் என்​பதை இச்​சம்​பவம் உணர்த்து​கிறது. எனவே, பேரிடர் காலங்​களில் அரசு மற்​றும் காவல்​படை​யின் வழிகாட்​டுதல்​களை மீனவர்​கள் கட்​டாயம் பின்​பற்ற வேண்​டும். இவ்​வாறு அதில் தெரி​வித்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT