தமிழகம்

தமிழகம் முழுவதும் பிரத்யேகமாக 65 போதைப் பொருள் தடுப்பு படை காவல் நிலையங்கள் அமைப்பு: அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் பிரத்​யேக​மாக 65 போதைப் பொருள் தடுப்​புப் படை காவல் நிலை​யங்கள் அமைப்​ப​தற்​கான அரசாணை வெளி​யிடப்பட்டுள்​ளது.

தமிழக முதல்​வ​ராக விஜய் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை பதவி​யேற்​றுக் கொண்​டார். பதவி​யேற்​றவுடன் 2 மாதங்​களில் 500 யூனிட்​கள் வரை மின்​சா​ரம் பயன்​படுத்​தும் மின் நுகர்​வோருக்கு 200 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும், பெண்​களின் பாது​காப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை, போதைப் பொருள் தடுப்​புக்கு மாவட்​டம்​தோறும் சிறப்​புப் படை ஆகிய 3 வாக்​குறு​தி​களை நிறைவேற்​றும் வகை​யில் கோப்​பு​களில் விழா மேடை​யிலேயே முதல்​வர் விஜய் கையெழுத்​திட்​டார்.

இதையடுத்​து, தமிழகத்​தில் போதைப் பொருள் தொடர்​பான குற்​றங்​களை தடுத்து கடுமை​யான நடவடிக்​கைகளை எடுக்​கும் வகை​யில், தமிழகம் முழு​வதும் 65 போதைப் பொருள் தடுப்பு காவல் நிலை​யங்​கள் பிரத்​யேக​மாக அமைக்​கப்​படு​கின்​றன. அதாவது மாவட்​டத்​துக்கு ஒரு போதைப் பொருள் தடுப்பு காவல் நிலை​யம் வீதம் 37 போதைப் பொருள் தடுப்பு காவல் நிலை​யங்​கள் அமைக்​கப்பட உள்​ளன. அது தவிர 9 காவல் ஆணை​யரகங்​களி​லும் 28 காவல் நிலை​யங்​கள் அமைக்​கப்பட உள்​ளன. இதற்​கான அரசாணையை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.

தமிழகம் முழு​வதும் போதைப்​பொருள் கடத்​தல் மற்​றும் விற்​பனையைத் தடுக்​கவே இந்த காவல் நிலை​யங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன. முதல்​வரின் நேரடி கண்​காணிப்​பில் இந்த புதிய படை இயங்​கும். இளைஞர்​கள் மற்​றும் மாணவர்​களை போதைப் பொருள் பழக்​கத்​திலிருந்து பாது​காப்​பதே இதன் முதன்மை நோக்​கம் என தெரி​விக்கப்பட்டுள்ளது. விழா மேடை​யில் முதல்​வர் விஜய் கையெழுத்​திட்ட 3 அறி​விப்​பு​கள் தொடர்​பாக​வும் அடுத்​தடுத்து அரசாணைகள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT