தமிழகம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பம்

ரூ.274 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: ​வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழு​வதும் 6.48 லட்​சம் விண்​ணப்​பங்​கள் புதி​தாக பெறப்​பட்​டுள்​ள​தாக தமிழகத் தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

மேலும் இந்த கால​கட்​டத்​தில் ரூ.273.71 கோடி மதிப்​புள்ள ரொக்​கம் உள்​ளிட்ட பொருட்​கள் பறிமுதல் செய்யப்​பட்​டுள்​ள​தாக​வும் அவர் தெரி​வித்​துள்​ளார்.

          

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலை முன்​னிட்​டு, கடந்த ஜன.1-ம் தேதியை தகு​தி​யேற்​படுத்​தும் நாளாகக் கொண்​டு, சிறப்​புத் தீவிர திருத்​தத்​தின் இறுதி வாக்​காளர் பட்​டியல் கடந்த பிப்​.23-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

அன்​றி​லிருந்து கடந்த 26-ம் தேதி வரை, வாக்​காளர் பட்​டியலில் புதிதாக பெயர் சேர்ப்​புக்​காக 6 லட்​சத்து 48,285 விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டுள்​ளன. இதில் ஆண்​கள் 2 லட்​சத்து 89,581, பெண்​கள் 3 லட்​சத்து 58,500 மற்​றும் 3-ம் பாலினத்​தவர் 204 பேர் பெயர் சேர்க்க விண்​ணப்​பித்​துள்​ளனர்.

அதி​கபட்​ச​மாக சோழிங்​கநல்​லூர- 17,476, மாதவரம் - 10,790, கவுண்​டம்​பாளை​யம் - 10,123 விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன. அனைத்து விண்​ணப்​பங்​களும் பரிசீலிக்​கப்​பட்​டு, வேட்​பு மனு தாக்​கல் செய்​வதற்​கான கடைசி நாளான வரும் ஏப்​.6-ம் தேதி அடிப்​படை​யில் வாக்​காளர் பட்​டியல் தயாரிக்​கப்​படும்.

இப்​பட்​டியலில் தகு​தி​வாய்ந்த அனைத்து வாக்​காளர்​களும் சேர்க்​கப்​படு​வர். சட்​டப்​பேரவை பொதுத்​தேர்​தலுக்கு பயன்​படுத்​தப்​படும் வாக்​காளர் பட்​டிய​லானது, ஒரு ‘ஒருங்​கிணைந்த பட்​டிய​லாக’ இருக்​கும்.

தொடர் திருத்​தக் காலத்​தின்​போது மேற்​கொள்​ளப்​பட்ட அனைத்​துச் சேர்க்​கைகளை​யும் உள்​ளடக்​கிய​தாக இருக்​கும். வாக்​காளர் பட்​டியலில் செய்​யப்​பட்ட சேர்க்​கைகள், நீக்​கங்​கள் மற்​றும் திருத்​தங்​கள் குறித்து தனித்​தனி​யாக பட்​டியல்​கள் வெளி​யிடப்​படு​வ​தில்​லை.

மாறாக, அனைத்து வாக்​காளர்​களும் ஒரே வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெறு​வர், மேலும் அப்​பட்​டியலே அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளுக்​கும் வழங்​கப்​படும்.

மேலும், அனைத்து சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களி​லும், ஈடு​படுத்​தப்​பட்​டுள்ள கண்​காணிப்​புக் குழுக்​கள் 24 மணி நேர​மும் தீவிர​மாக கண்​காணித்து வரு​கின்​றன.

அந்த வகை​யில், நேற்று காலை நில​வரப்​படி, ரூ.44.89 கோடி ரொக்​கம், ரூ.93 லட்​சம் மதிப்பு மது​பானங்​கள், ரூ.7.60 கோடி மதிப்பு போதைப்​பொருட்​கள், ரூ.116.07 கோடி மதிப்பு தங்​கம், வெள்ளி உள்​ளிட்ட விலைம​திப்​பற்ற உலோகங்​கள், ரூ.104.30 கோடி மதிப்பு இலவசங்​கள், பரிசுப்​பொருட்​கள் என ரூ.273.71 கோடி மதிப்​புள்ள பொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT