தமிழகம்

மெரினாவில் இரவில் அணிவகுத்து சென்ற பைக்குகள்: 600 இருசக்கர வாகனங்களில் சாலை பாதுகாப்பு பேரணி

செய்திப்பிரிவு

சென்னை: ​சாலை பாது​காப்பு விழிப்​புணர்​வின் ஒரு பகு​தி​யாக, 600 பைக்​கு​கள் மெரி​னா​வில் அணிவகுத்து சென்​றன. இந்த மாதம் ஜனவரி 1 முதல் 31-ம் தேதி வரை சாலை பாது​காப்பு மாதம் கடைபிடிக்​கப்​படு​கிறது.

இதையடுத்து இந்த ஜனவரி முழு​வதும் பல்​வேறு சாலை பாது​காப்பு மற்​றும் விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் பள்​ளி​களி​லும், கல்​லூரி​களி​லும் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

மேலும் பொது​மக்​கள், தனி​யார் நிறு​வனங்​கள் மற்​றும் அரசு நிறு​வனங்​களிடையே சாலை பாது​காப்பு குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் வகை​யில் பல்​வேறு சாலை பாது​காப்பு சார்ந்த நிகழ்ச்​சிகள் தொடர்ந்து நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

நேப்பியர் பாலத்தில் நிறைவு இதன் ஒரு பகு​தி​யாக சென்னை பெருநகர போக்​கு​வரத்து காவல் துறை சார்​பில் நேற்று முன்​தினம் இரவு ‘சூப்​பர் பைக் பேரணி’ மெரினா காம​ராஜர் சாலை​யில் நடை​பெற்​றது. இதை சென்னை போக்​கு​வரத்து காவல் கூடு​தல் ஆணை​யர் கார்த்​தி​கேயன் கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

இந்த பேரணியில் 600-க்​கும் மேற்​பட்ட தன்​னார்​வலர்​கள் மற்​றும் போக்​கு​வரத்து காவல் துறை​யினர் பாது​காப்பு அம்​சங்​களு​டன் பங்​கேற்​றனர். இந்த பேரணியானது அண்ணா சதுக்​கம் பேருந்து நிலை​யத்​தில் தொடங்கி காம​ராஜர் சாலை உழைப்​பாளர் சிலை, காந்தி சிலை, ஆர்​.கே.​சாலை, அண்ணா ரோட்​டரி, பெரி​யார் சிலை, கொடி மரச்​சாலை வழி​யாக சென்று நேப்​பியர் பாலத்​தில் முடிவடைந்​தது.

இந்​நிகழ்ச்​சி​யில் போக்​கு​வரத்து காவல் இணை ஆணை​யர் விஜயகு​மார், துணை ஆணை​யர்​கள் மேகலினா ஐடன், குமார், ஜெயகரண் (ஆயுதப்​படை) உட்​பட பலர்​ கலந்​து கொண்​டனர்​.

SCROLL FOR NEXT