தமிழகம்

மாதவரம் அருகே எரிவாயு குழாய் உடைந்து தீ விபத்து: 6 கடைகள் சேதம்

தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: ​மாதவரம் அருகே பூமிக்​கடி​யில் மின்​சார கேபிள் பதிப்​ப​தற்​காக ராட்சத டிரில்​லிங் இயந்​திரம் மூலம் பள்​ளம் தோண்​டிய​போது, இயற்கை எரி​வா​யுக் குழாய் உடைந்து வாயுக் கசிவு ஏற்​பட்​டது. தொடர்ந்து தீப்​பிடித்​த​தில் 6 கடைகள், ஒரு லாரி மற்​றும் ஒரு வேன் எரிந்து சேதமடைந்​தன.

சென்னை மீஞ்​சூர் அருகே கொண்​டக்​கரை பகு​தியி​லிருந்து சென்​னை, திரு​வள்​ளூர் மற்​றும் காஞ்​சிபுரம் மாவட்​டங்​களுக்கு பூமிக்​கடி​யில் பதிக்​கப்​பட்​டுள்ள குழாய்​கள் மூலம் இயற்கை எரி​வாயு விநி​யோகிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த எரி​வாயு குழாய் வலை​யமைப்பை தனி​யார் காஸ் நிறு​வனம் பராமரித்து வரு​கிறது. இந்​நிலை​யில், மாதவரம் அடுத்த மஞ்​சம்​பாக்​கம் பகு​தி​யில் மின்​சார கேபிள்​களை பூமிக்​கடி​யில் பதிக்​கும் பணி ஒப்​பந்த அடிப்​படை​யில் ஒரு தனி​யார் நிறு​வனத்​தால் மேற்​கொள்​ளப்​பட்டு வந்​தது.

நேற்று முன்​தினம் நள்​ளிரவு முதல் ராட்சத டிரில்​லிங் இயந்​திரம் மூலம் பள்​ளம் தோண்​டும் பணி நடை​பெற்​றது. நேற்று அதி​காலை சுமார் 3.15 மணி​யள​வில் டிரில்​லிங் இயந்​திரம் எதிர்​பா​ராத வித​மாக, பூமிக்​கடி​யில் சென்ற இயற்கை எரி​வா​யுக் குழாயை சேதப்​படுத்​தி​யது.

இதனால் அதிக அழுத்​தத்​தில் இருந்த எரி​வாயு நீரூற்று போல பல அடி உயரத்​துக்கு பீறிட்டு வெளி​யேறி திடீரென தீப்​பிடித்து கொழுந்துவிட்டு எரிந்​தது. இதில் சாலை​யோரத்​தில் இருந்த மீன் கடை, டிபன் கடை, காய்​கறிக் கடை, ஹார்​டு​வேர் கடை உள்​ளிட்ட 6 கடைகள் முழு​வது​மாக தீக்​கிரை​யாகின.

மேலும் அங்கு நிறுத்​தப்​பட்​டிருந்த ஒரு லாரி மற்​றும் ஒரு வேனும் தீயில் எரிந்து சேதமடைந்​தன. அதி​காலை நேரம் என்​ப​தால் கடைகளில் யாரும் இல்​லாத​தால் உயி​ரிழப்போ, காயங்​களோ ஏற்​பட​வில்​லை. இருப்​பினும் பல லட்​சம் ரூபாய் மதிப்​பிலான பொருட்​கள் தீயில் கரு​கிய​தாக கூறப்​படு​கிறது.

எரி​வாயு விநி​யோகம் நிறுத்தம்

தீயணைப்பு வீரர்​கள் விரைந்து சென்று தீயை அணைத்​தனர். மேலும் காஸ் நிறுவன பொறி​யாளர்​கள், எரி​வாயு விநி​யோகத்தை உடனடி​யாக நிறுத்​தினர். இருப்​பினும் சுமார் 2 மணி நேரம் போராட்​டத்​துக்கு பிறகே தீ முற்​றி​லும் அணைக்​கப்​பட்​டது.

இது ஒரு​புறம் இருக்க அலட்​சி​ய​மாக பணி​யாற்றி இயற்கை எரி​வா​யுக் குழாயை சேதப்​படுத்​தி​ய​தாக சம்​பந்​தப்​பட்ட தனி​யார் நிறு​வனம் மீது மாதவரம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து விசா​ரித்​து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT