தமிழகம்

இந்த கல்வியாண்டில் 60 லட்சம் இலவச பஸ் பாஸ்: போக்குவரத்து கழகம் சாதனை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் 1 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்​கப்​படு​கிறது. இதன்மூலம் ஏழை எளிய மாணவர்​கள் பயனடைகின்றனர். பஸ்பாஸ் விநியோக தாமதத்தை தவிர்க்க 2024–25 கல்​வி​யாண்​டில் எமிஸ் தளத்​தில் உள்ள மாணவர் தரவு​களை தொகுத்து 25 சதவீதம் கூடு​தலாக இலவச பயண அட்​டைகள் வழங்​கப்​பட்​டன.

இதனைத் தொடர்ந்​து, 2025- 26 நடப்பு கல்வி ஆண்​டிலும் மாணவர் விபரங்கள் பெறப்​பட்டு கட்​ட​ணமில்லா பேருந்து பயணஅட்​டைகள் விரைந்து தயாரிக்​கும் பணி போக்குவரத்து, பள்​ளிக் கல்​வித் துறை​ ஒருங்​கிணைந்து செயல்படுத்தியது. இதன்படி நடப்பு கல்​வி​யாண்​டில் 60 லட்​சம் மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்கி போக்​கு​வரத்​துத் துறை புதிய சாதனை படைத்​துள்​ளது.

SCROLL FOR NEXT