கோவையில் தற்கொலை செய்த மாணவர் அகிலனின் பெற்றோரிடம் ரூ.6 லட்சம் தொகைக்கான உத்தரவையும், அவரது சகோதரி நேத்ராவுக்கு அரசுப் பணிக்கான ஆணையையும் வழங்கிய அமைச்சர் வே.சம்பத்குமார்.

 
தமிழகம்

கோவை பள்ளி மாணவர் அகிலன் குடும்பத்துக்கு ரூ.6 லட்​சம் நிதி, அரசு வேலை

வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

கோவை: பள்ளி மாணவர் அகிலன் தற்​கொலை தொடர்​பான வழக்கு விசா​ரணையை சிபி​சிஐடி போலீ​ஸாருக்கு மாற்​றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால் உத்​தர​விட்​டுள்​ளார்.

கோவை பீளமேட்​டைச் சேர்ந்த அசோக்​குமார் - கவுசல்யா தேவி தம்​ப​தி​யின் மகன் அகிலன் (16), அரசு உதவி​பெறும் பள்​ளி​யில் 11-ம் வகுப்பு படித்து வந்​தார். கடந்த 21-ம் தேதி அகிலன் வீட்​டில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து​கொண்​டார். பள்​ளி​யில் தலைமை ஆசி​ரியர் அருண்​குமார், ஆசி​ரியர் விஜயகுமார், சக மாணவர்​கள் இரு​வர் உள்​ளிட்​டோர் சாதிய கண்​ணோட்​டத்​தில் அணுகிய​தால், மனம் உடைந்த அகிலன் தற்​கொலை செய்து கொண்​ட​தாக அவரது பெற்​றோர் பீளமேடு காவல்​நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.

அந்த புகாரின்​பேரில், அருண்​குமார், விஜயகுமார் மற்​றும் 2 மாணவர்​கள் மீது தாழ்த்​தப்​பட்​டோருக்கு எதிரான வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட 3 பிரிவு​களின்​கீழ் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். மாணவர்​கள் இரு​வரை​யும் கைது செய்து கூர்​நோக்கு இல்​லத்​தில் அடைத்​தனர்.

இதனிடையே, இந்த விவகாரத்​தில் தொடர்​புடைய தலைமை ஆசி​ரியர் அருண்​குமார், ஆசி​ரியர் விஜயகுமார் ஆகியோரை​யும் கைது செய்ய வலியுறுத்தி அகிலனின் பெற்​றோர், குடும்​பத்​தினர், ஊர்​மக்​கள் உள்​ளிட்​டோர் தெற்கு தாலுகா அலு​வல​கம் அருகே காத்​திருப்​புப் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அகிலன் உடலை பிரேதப் பரிசோதனை செய்​ய​வும் அனுமதிக்​க​வில்லை.

இந்​நிலை​யில், அகிலன் தற்​கொலை வழக்கை சிபி​சிஐடி போலீ​ஸாருக்கு மாற்​றம் செய்து டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால் நேற்று உத்​தர​விட்​டார். வழக்கு தொடர்​பான அசல் கோப்​பு​கள், விசா​ரணை ஆவணங்​களை உடனடி​யாக சிபி​சிஐடி டிஜிபி வசம், மாநகர காவல் ஆணை​யர் ஒப்​படைக்க வேண்​டும். சிபி​சிஐடி டிஜிபி, உரிய அதி​காரியை நியமித்து விசா​ரணையை தொடங்க வேண்​டும் என உத்​தர​வில் கூறப்​பட்​டுள்​ளது. இதைத் தொடர்ந்து அகிலனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய அவரது குடும்​பத்​தினர் சம்​மதித்​தனர்.

இந்​நிலை​யில், தொடர் காத்​திருப்​புப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுவந்த அகிலனின் குடும்​பத்​தினரை, தெற்கு தாலுகா அலு​வல​கத்​தில், பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை அமைச்​சர் வே.சம்​பத்​குமார் நேற்று சந்​தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அரசு சார்​பில் ரூ.6 லட்​சம் நிவாரண தொகைக்​கான ஆணையை அகிலனின் பெற்​றோரிடம் வழங்​கினார். பின்​னர், அகிலனின் சகோ​தரி நேத்​ரா​வுக்கு, ஆனைக்​கட்டி உண்டு உறைவிடப் பள்​ளி​யில் இளநிலை உதவியாளராக அரசுப் பணிக்​கான ஆணை​யையும் அமைச்​சர் வழங்​கினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT