பி.ஏ.நரேஷ்
சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் மாற்றப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசு தேர்வுகள் இயக்குநர் கே.சசிகலா இடமாற்றம் செய்யப்பட்டு, தொடக்கக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் எம்.பழனிசாமி மாற்றப்பட்டு, தனியார் பள்ளிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (எஸ்எஸ்ஏ) கூடுதல் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்படுகிறார். தனியார் பள்ளிகள் இயக்குநர் எஸ்.சுகன்யா இடமாற்றம் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய செயலராக நியமிக்கப்ப்டுள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில கூடுதல் திட்ட இயக்குநர் எஸ்.உமா மாற்றப்பட்டு, அரசு தேர்வுகள் இயக்குநராக நியமிக்கப்படுகிறார். ஆசிரியர் தேர்வு வாரிஇணை இயக்குநர் கே.ஸ்ரீதேவிக்கு இயக்குநர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக பணியமர்த்தப்படுகிறார்.