தமிழகம்

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறைக்காக 5,400 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்தி மற்​றும் வார விடு​முறையையொட்டி 5,400 சிறப்​புப் பேருந்​துகள் இன்று முதல் இயக்​கப்பட உள்​ள​தாக போக்​கு​வரத்து கழகம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: விநாயகர் சதுர்த்தி மற்​றும் வார விடு​முறையை முன்​னிட்டு தினசரி இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு இன்று முதல் 585 பேருந்​துகளும், நாளை 1255 பேருந்​துகளும், நாளை மறு​நாள் 1030 பேருந்​துகளும், ஞாயிற்​றுக்​கிழமை 650 பேருந்​துகளும் இயக்​கப்​படு​கிறது.

கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர். பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு நாளை 240 பேருந்​துகளும், நாளை மறு​நாள் 240 பேருந்​துகளும், ஞாயிற்​றுக்​கிழமை 105 பேருந்​துகளும் இயக்​கப்​படு​கின்​றன.

அதே​போல், பெங்​களூர், திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோவை ஆகிய இடங்​களி​லிருந்​தும் பல்​வேறு இடங்​களுக்கு 200 சிறப்​புப் பேருந்​துகளும் இயக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மாதவரத்​திலிருந்து நாளை முதல் ஞாயிற்​றுக்​கிழமை வரை கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், வேலூர், ஓசூர் மற்​றும் புதுச்​சேரி ஆகிய இடங்​களுக்கு ஒவ்​வொரு நாளும் 110 சிறப்​புப் பேருந்​துகளும் இயக்​கப்பட உள்​ளது.

மேலும், செப்​.15ம் தேதி சொந்த ஊர்​களில் இருந்து சென்னை மற்​றும் பெங்​களூர் திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவை​கேற்ப அனைத்து இடங்​களி​லிருந்​தும் 765 சிறப்​புப் பேருந்​துகள் இயக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இந்த விடு​முறை தினங்​களில் பயணம் மேற்​கொள்ள இன்​றைய தினம் 8,666 பயணி​களும், நாளை 32,171 பயணி​களும், நாளை மறு​நாள் 18,772 பயணி​களும் மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை 11,177 பயணி​கள் மற்​றும் திங்​கள் கிழமை 23,740 பயணி​களும் முன்​ப​திவு செய்​துள்​ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT