முஸ்லிம்கள் மீது சிறு துரும்பும் படாமல் அதிமுக அரசு பாதுகாத்து வருவதாக, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று (பிப்.15) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தார்.
அப்போது, "முஸ்லிம் சகோதரர்கள் மீது சிறு துரும்பும் படாமல், தூசு படாமல் பாதுகாத்து வரும் அரசு அதிமுக அரசு. முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகும், கடந்த 3 ஆண்டுகளாக முஸ்லிம்களைத் தங்கள் பிள்ளைகளாக, குடும்ப உறுப்பினர்களாக, உறவுகளாக அதிமுக அரசு பாதுகாத்து வருகிறது.
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், பொய்யான பிரச்சாரத்தை, கோயபல்ஸ் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். அது அவர்களுக்கு எந்த விதமான பலன்களையும் தராது. மக்களும் அதனை நம்ப மாட்டார்கள். உண்மை ஒரு நாள் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வரும்"
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
தவறவிடாதீர்!