தமிழகம்

சென்னை தீவுத் திடலில் 50-வது சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தீவுத் திடலில் 50-வது இந்​திய சுற்​றுலா மற்​றும் தொழில் பொருட்காட்சி நேற்று தொடங்​கியது. தமிழக அரசின் சுற்​றுலாத்துறை சார்​பில், சென்னை தீவுத்​திடலில் ஆண்​டு​தோறும் சுற்​றுலா மற்​றும் தொழில் பொருட்காட்சி கடந்த 49 ஆண்​டு​களாக நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த ஆண்டு பொன்​விழா ஆண்டு ஆகும். எனவே, பொன்​விழா கொண்​டாட்ட பொருட்காட்சியை சிறப்​பாக நடத்​துவதற்கு தமிழக அரசு அனு​மதி அளித்து அரசுத்​துறை அரங்​கங்​களை அமைக்க ரூ.1.55 கோடி வழங்​கியது.

இந்​நிலை​யில், 50-வது இந்​திய சுற்​றுலா மற்​றும் தொழில் பொருட்காட்சி தீவுத் திடலில் நேற்று தொடங்​கியது. இந்த பொன்​விழா பொருட்காட்சியை சுற்​றுலாத் துறை அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன், சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு ஆகியோர் கூட்​டாக தொடங்கி வைத்​தனர்.

இவ்​விழா​வில், மேயர் பிரி​யா, துணை மேயர் மகேஷ்கு​மார், சுற்றுலாத் துறை செயலர் கே.மணிவாசன், சுற்​றுலா ஆணை​யர் மற்​றும் சுற்​றுலா வளர்ச்​சிக் ​கழக மேலாண் இயக்​குநர் டி.கிறிஸ்​து​ராஜ், சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே, சுற்​றுலா வளர்ச்​சிக்​ கழக பொது மேலா​ளர் சி.லட்​சுமி பிரி​யா, சுற்​றுலாத் துறை இணை இயக்​குநர் அ.சிவப்​பிரியா உள்​ளிட்​டோர் கலந்​து கொண்​டனர்.

43 அரங்​கு​கள்: இந்த பொருட்காட்சியில் தமிழக அரசுத் துறை மற்​றும் மத்​திய அரசுத் துறை அரங்​கு​கள் என மொத்​தம் 43 அரங்​கு​கள் இடம் பெற்​றுள்​ளன. அதோடு, 15 தனி​யார் அரங்​கு​களும் உள்​ளன. ராட்சத வீல், ஆக்​டோபஸ், சுனாமி, ஸ்விங் சேர், டெக்னோ ஜம்ப் உட்பட சிறு​வர்​கள் முதல் பெரிய​வர்​கள் வரை விளை​யாடும் விளை​யாட்டு சாதனங்​கள் இடம் பெற்​றுள்​ளன.

குழந்​தைகளை கவரும் வகை​யில் அதிர​வைக்​கும் பேய்​வீடு, பனிக்​கட்டி உலகம், 3-டி ஷோ, பறவை​கள் கண்​காட்​சி, வாட்​டர் ரோல், கார்​னிவெல் விளை​யாட்​டு​கள் உள்​ளிட்ட பல்​வேறு சிறப்பு அம்​சங்​களை​யும் பொருட்காட்சி​யில் கண்​டு​களிக்​கலாம்.

நுழைவுக்​ கட்​ட​ணம் எவ்​வளவு? - நுழைவுக் கட்​ட​ணம் பெரிய​வர்​களுக்கு ரூ.40. சிறு​வர்​களுக்கு (4 வயது 10 வயது வரை) ரூ.25. பள்​ளி, கல்​லூரி மாணவர்​களுக்கு சலுகை கட்​ட​ணம் ரூ.25. www.ttdcfair.com என்ற இணை​யதளம் வழி​யாக​வும் நுழைவுச் சீட்டை பெறலாம்.

பொருட்காட்சியை திங்​கள் முதல் வெள்ளி வரை தின​மும் பிற்​பகல் 3 முதல் இரவு 10 மணி வரை​யும், சனி, ஞாயிறு மற்​றும் விடு​முறை நாட்​களில் காலை 11 முதல் இரவு 10 மணி வரை​யும் கண்டு களிக்​கலாம். இந்த பொருட்காட்சி 70 நாட்​கள் நடை​பெறும் என சுற்​றுலா வளர்ச்​சிக்​ கழகம்​ அறிவித்துள்​ளது.

SCROLL FOR NEXT