சென்னை: தலைமைச்செயலர் முருகானந்தம் வெளியிட்ட அறிவிப்பு: தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசன்ட் திவ்யா சுற்றுலாத் துறைக்கும் அங்கிருந்த தா.கிறிஸ்துராஜ் டாஸ்மாக் நிறுவனத்துக்கும், அங்கிருந்த ச.விசாகன் தொழில்நுட்பக் கல்வித் துறைக்கும் மாற்றப்பட்டனர்.
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையில் இருந்த ச.உமா சுகாதாரத் துறைக்கும் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் செயலர் த.ரத்னா, வீட்டுவசதித் துறைக்கும் மாற்றப்பட்டனர்.