4,184 போலீஸாருக்கு முதல்வரின் பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு

4,184 போலீஸாருக்கு முதல்வரின் பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: பொங்​கல் தினத்​தையொட்டி தமிழக காவல்​துறைச் சேர்ந்த 4,184 பேருக்கு முதல்​வரின் பொங்​கல் பதக்​கம் வழங்​கப்​படும் என தமிழக அரசு அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக உள்​துறைசெயலர் தீரஜ்கு​மார் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: தமிழகத்​தில் காவல், தீயணைப்பு மற்​றும் மீட்​புப்​பணி, சிறை​கள் மற்​றும் சீர்​திருத்​தப் பணி, தொழில்​நுட்ப மற்​றும் சிறப்​புப் பணி சேவை​கள் ஆகிய துறை​களில் பணி​யாற்​றும் பணி​யாளர்​கள், தமது பணி​யில் வெளிப்​படுத்​தும் நிகரற்ற செயல்​பாட்​டினை அங்​கீகரித்து அவர்​களை ஊக்​குவிக்​கும் வகை​யில், ஆண்​டு​தோறும் பொங்​கல் தினத்​தன்​று, தமிழக முதல்​வரின் பதக்​கங்​கள் அறிவிக்​கப்​பட்​டு, வழங்​கப்​பட்டு வரு​கின்றன.

இந்த ஆண்​டு, காவல் துறை​யில் (ஆண்/ பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலை​மைக் காவலர் மற்​றும் சிறப்பு சார்பு ஆய்​வாளர் நிலைகளில் 4 ஆயிரம் பணி​யாளர்​களுக்கு 'தமிழக முதல்​வரின் காவல் பதக்​கங்​கள்' வழங்க முதல்​வர் ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்ளார். மேலும், தீயணைப்பு மற்​றும் மீட்​புப் பணி​கள் துறை​யில் முன்​னணி தீயணைப்​போர், இயந்​திரகம்​மியர் ஓட்​டி, சிறப்பு நிலைய அலு​வலர் (போக்​கு​வரத்​து), இயந்​திர கம்​மியர் ஓட்​டி, தீயணைப்​போர் ஓட்டி (தரம் உயர்த்​தப்​பட்ட இயந்​திர கம்​மியர் ஓட்​டி) மற்​றும் தீயணைப்​போர் (தரம் உயர்த்​தப்​பட்ட முன்​னணி தீயணைப்​போர்) ஆகிய நிலைகளில் 120 அலு​வலர்​களுக்கு பதக்​கம் வழங்​கப்​பட​வுள்​ளது.

மேலும் சிறை​கள் மற்​றும் சீர்​திருத்​தப் பணி​கள் துறை​யில் முதல் நிலை வார்​டர்​கள் (ஆண்), முதல் நிலை வார்​டர்​கள் (பெண்), இரண்​டாம் நிலை வார்​டர்​கள் (ஆண்) மற்​றும் இரண்​டாம் நிலை வார்​டர்​கள் (பெண்) நிலைகளில் 58 அலு​வலர்​களுக்​கும் 'முதல்​வரின் சிறப்பு பணிப்​ப​தக்​கங்​கள்' வழங்க முதல்​வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

இந்தப் பதக்​கங்​கள் பெறு​பவர்​களுக்கு நிலை​வேறு​பாடின்றி மாதாந்​திர பதக்​கப்​படி 2026 பிப்​ர​வரி 1-ம் தேதி முதல் வழங்​கப்​படும். மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்​றும் காவல் புகைப்​படக் கலைஞர்​கள் பிரிவு​களில் பணி​யாற்​றும் அதி​காரி​கள் மற்​றும் அலு​வலர் கள் என ஒவ்​வொரு பிரிவிலும் 2 நபர்​கள் வீதம், மொத்தம் 6 அதி​காரி​கள் மற்​றும் அலு​வலர்​களுக்கு 'தமிழக முதல்​வரின் காவல் தொழில்​நுட்ப மற்​றும் சிறப்​புப் பணிப் பதக்​கம்' வழங்க முதல்​வர் உத்​தர​விட்​டுள்​ளார்.

இப்​ப​தக்​கங்​கள் பெறு​வோருக்கு அவர​வர் நிலைகளுக்​குத் தக்​க​வாறு ரொக்கத் தொகை வழங்​கப்​படும். இந்த பதக்​கம் பின்​னர் நடை​பெறும் சிறப்பு பதக்க அணிவகுப்பு விழா​வில் முதல்​வரின் கையொப்​பத்​துடன் கூடிய பதக்​கச்​சுருள் வழங்​கப்​படும். இவ்​வாறு உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

4,184 போலீஸாருக்கு முதல்வரின் பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு
“இயற்கை தந்த வரங்களுக்கு நன்றி சொல்லும் விழா பொங்கல்” - குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in