தமிழகம்

2 ஆண்டுகளில் செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி 4-வது ரயில் பாதை

செய்திப்பிரிவு

சென்னை: தாம்​பரம் - செங்​கல்​பட்டு இடையி​லான 4-வது ரயில் பாதை திட்​டத்​தில் முதல்​கட்​ட​மாக ரூ.273 கோடி​யில் செங்​கல்​பட்டு - கூடு​வாஞ்​சேரி இடையே புதிய ரயில் பாதை அமைக்​கப்பட உள்​ளது. இப்​பணி 2 ஆண்​டு​களில் நிறைவடைந்து பயன்​பாட்​டுக்கு வரும் என்று தெரி​கிறது.

சென்னை ரயில்வே கோட்​டத்​தில், சென்னை – தாம்​பரம் – செங்​கல்​பட்டு ரயில் பாதை தென்​மாவட்​டங்​களுக்கு செல்ல பிர​தான பாதை​யாக உள்​ளது. இந்த வழித்தடத்​தில் தின​மும் 50-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​களும், 250-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​களும் இயக்​கப்​படு​கின்​றன.

தாம்​பரத்​தில் இருந்து செங்​கல்​பட்டு வரையி​லான புறநகர் பகு​தி​களில் குடி​யிருப்​பு​கள், தொழிற்​சாலைகள், தனி​யார் நிறு​வனங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. தற்​போது தாம்​பரம் - செங்​கல்​பட்டு இடையே 3 ரயில் பாதைகள் மட்​டுமே இருப்​ப​தால் கூடு​தல் ரயில்​களை இயக்​கு​வ​தில் சிக்​கல் இருந்து வரு​கிறது.

இந்​நிலை​யில் தாம்​பரம் – செங்​கல்​பட்டு இடையே 30.2 கி.மீ. தொலை​வுக்கு 4-வது ரயில் பாதை அமைக்க விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்​கப்​பட்​டது. இதற்கு கடந்த ஆண்டு ஜனவரி​யில் ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​தது.

இதையடுத்து இத்​திட்​டத்​தில் முதல்​கட்​ட​மாக கூடுவாஞ்சேரி முதல் செங்​கல்​பட்டு வரை ரூ.273 கோடி​யில் பணி​கள் மேற்​கொள்ள டெண்​டர் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இது குறித்து ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: தாம்​பரம் – செங்​கல்​பட்டு இடையே 4-வது ரயில் வழித்​தடம் அமைக்க ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்​தது.

இதற்​கான நிலம் கையகப்​படுத்​து​வது போன்ற அடிப்​படை பணி​கள் முடிக்​கப்​பட்​டுள்​ளன. இதில், முதல்​கட்​ட​மாக செங்​கல்​பட்டு - கூடு​வாஞ்​சேரி வரை 21.5 கி.மீ. தொலை​வுக்கு ரூ.273 கோடி​யில் புதிய ரயில் பாதை அமைக்​கும் பணிக்கு டெண்​டர் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

ஒப்​பந்​த​தா​ரரை தேர்வு செய்​து, இரண்டு ஆண்​டு​களில் பணி​களை முடிக்க திட்​ட​மிட்​டப்​பட்​டுள்​ளது. இரண்​டாம் கட்​ட​மாக, கூடு​வாஞ்​சேரி- தாம்​பரம் வரையி​லான 8.7 கி.மீ. தொலைவு பாதை அமைக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளளப்பட உள்​ளன.

இத்​திட்​டத்​தின் மொத்​தச்​செலவு ரூ.713.56 கோடி​யாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. கட்​டு​மானப்​பணி​கள் நிறைவடை​யும் போது, இந்​தச்​செலவு ரூ.756 கோடி​யாக உயரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மணிக்கு 130 கி.மீ. வரையி​லான வேகத்​தில் ரயில்​கள் செல்​லும் வகை​யில் இந்த ரயில் பாதை அமைக்​கப்​படும். தாம்​பரம் – செங்​கல்​பட்டு இடையே 4-வது பாதை பணி​கள் முடிந்​து, பயன்​பாட்​டுக்கு வரும்​போது, 25 சதவீதம் கூடு​தல்​ ரயில்​களை இயக்​க முடி​யும்​. இவ்​வாறு அவர்கள் கூறினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT