கோப்புப் படம்
சென்னை: அரசு மருத்துவமனைகளில் தற்காலிக முறையிலான 4,724 பணியிடங்களுக்கு 49 ஆயிரம் செவிலியர்கள் விண்னப்பித்தனர். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதனால், தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் 11 மாத தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் 4,724 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார நலவாழ்வுச் சங்கம் மூலமாக நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் 49 செவிலியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “செவிலியர்கள் தற்காலிக முறை நியமனத்துக்கு, சில செவிலியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேநேரம், பணியில் சேர பலர் விருப்பம் தெரிவித்து 49 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட சுகாதார நலவாழ்வுச் சங்கம் மூலமாக பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்றனர்.