தமிழகம்

ஓய்வூதியம், ஓய்வுகால நன்மைகளுக்கு ரூ.47,240 கோடி | தமிழக பட்ஜெட் 2026-27

செய்திப்பிரிவு

சென்னை: ஓய்வூதியம், ஓய்வுக்கால நன்மைகளுக்கு ரூ.47,240 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், அவர்களின் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்கள், ஓய்வூதியர் துணைவியார் உள்ளிட்டோர் மற்றும் குடும்ப ஓய்வு ஊதியர்களுக்காக 2026 ஜூலை 1 முதல் 2031 ஜூன் 30 வரை ஐந்தாண்டு காலத்துக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரிய மற்றும் குறிப்பிட்டநோய்களுக்கு ஊழியர்களுக் கான திரள் நிதி உதவித் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1,535 அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவ நிறுவனங்கள் மூலம் சிகிச்சை பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த காப்பீட்டுத் திட்டத்தினைச் செயல்படுத்த ரூ.838 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஓய்வூதியம், ஓய்வுக்கால நன்மைகளுக்கு ரூ.47,240 கோடி ஒதுக்கப்படுகிறது.

நீதித்துறைக்கு ரூ.2,486 கோடி சென்னை பிராட்வேயில் ரூ.1,375 கோடியில் 160 நீதிமன்றங்களுடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற் கான முன்நடவடிக்கைகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீதி நிர்வாகத் துறைக்கு ரூ.2,486 கோடி ஒதுக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT