சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவு: தேர்தல் முடிவுகளுக்கான உண்மையான காரணங்களை அறிந்துகொள்ளும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘udanpirapinkural.in’ இணையதளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணைய தளத்தின் முக்கிய நோக்கமே கட்சியினர் அனைவரும் எவ்வித தயக்கமும் இல்லாமல், உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான்.
இதில் நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும். கட்சி நிர்வாகிகள், அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவேன். எனவே மே 31-ம் தேதிக்குள் (இன்று) உங்கள் கருத்து களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்.திமுக மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் இந்த செய்தி அனைத்து உடன்பிறப்புகளையும் சென்றடையும் வகையில் உங்களது சமூக வலைதளப் பக்கங்கள், வாட்ஸ்அப் குழுக்களிலும் பதிவு செய்ய வேண்டும்.