பழ.நெடுமாறன்

 
தமிழகம்

பழ.நெடுமாறன் உள்பட 46 பேர் கைதாகி விடுதலை

செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் மாவட்​டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மதகளிர் மாணிக்​கம் கிராமத்​தில் தமிழர் விடு​தலைப்​படை தலை​வர் தமிழரசனின் தாய் பதூசி அம்​மாள் நினை​விடம் உள்​ளது.

அங்கு நேற்​று​முன்​தினம் தமிழர் நீதிக்​கட்சித் தலை​வர் சுப.இளவரசன் தலை​மை​யில் பழ.நெடு​மாறன் உள்​ளிட்ட 46 பேர் அஞ்​சலி செலுத்த வந்தனர். தகவலறிந்து சென்ற ஸ்ரீமுஷ்ணம் போலீ​ஸார் அஞ்​சலி செலுத்த அனு​மதிமறுத்​தனர். இதனால் இருதரப்​புக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்டது.

இதையடுத்து சுப.இளவரசன், பழ.நெடு​மாறன் மற்​றும் 6 பெண்​கள் உள்​ளிட்ட 46 பேரைக் கைது செய்​தனர். பின்னர் இரவு அவர்கள் அனைவரையும் விடுவித்தனர். இதற்கு தமிழ்ப்​பேரரசு கட்​சி​யின் பொதுச்​செய​லா​ள​ரும், திரைப்பட இயக்​குநரு​மான கவுதமன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT