தமிழகம்

ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் மருந்தகம் மூடல்

செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் மருந்து விற்​பனையை தடுக்க கோரி தமிழகம் முழு​வதும் 45 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்​பட்​டன. ஆன்​லைன் மருந்து விற்​பனைக்கு தடை விதிக்க கோரி நாடு​முழு​வதும் மருந்து வணி​கர்​கள் நேற்று வேலை நிறுத்​தப்​போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

நாடு​முழு​வதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12.5 லட்​சம் மருந்​தகங்​களும், தமிழகத்​தில் மட்​டும் 45 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருந்​தகங்​கள் கடையடைப்பு செய்​யப்​பட்​டன.

மருத்​து​வ​மனை​களு​டன் இணைந்த மருந்​தகங்​கள், அப்​போலோ, மெட்​பிளஸ், துளசி பார்​மசி, முத்து பார்​மசி போன்ற சங்​கிலி தொடர் மருந்​தகங்​கள், முதல்​வர் மருந்​தகம், தமிழ்​நாடு கூட்​டுறவு சங்க மருந்​தகங்​கள், பிரதம மந்​திரி ஜன் ஔஷதி கேந்​திரா போன்ற அரசு ஆதரவு சில்​லறை விற்​பனை நிலை​யங்​கள் என சுமார் 5 ஆயிரம் மருந்​தகங்​கள் கடையடைப்​பில் பங்​கேற்​க​வில்​லை.

அத்​தி​யா​வசிய மருந்துகளுக்கு தட்​டுப்​பாடு ஏற்ப​டா​மல் இருக்​க​, மருந்துகள் கட்​டுப்​பாட்​டுத்​ துறை​யால் மாவட்ட வாரி​யாக உதவி எண்​கள், தமிழ்​நாடு மருந்து வணி​கர் சங்​க​மும் மாவட்ட வாரி​யாக உதவி எண்​களை அறி​வித்​திருந்​தன.

இதன் மூலம் பொது​மக்​கள் தங்​களுக்கு தேவை​யான மருந்​துகளை கேட்டு பெற்​றனர். ஆனாலும், வழக்​க​மாக பயன்​படுத்​தும் நிறு​வனங்​களின் மாத்​திரை, மருந்​துகள் கிடைக்​காத​தால் பலர் அவதிக்​குள்​ளாகினர்

SCROLL FOR NEXT