தமிழகம்

தீபாவளி பண்ட் நடத்தி ரூ. 4.25 கோடி மோசடி: சென்னையை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் தீபாவளி சிட்​பண்ட் நடத்தி சுமார் 1,000 பேரிடம் ரூ.4.25 கோடி மோசடி செய்​த​தாக சென்​னையைச் சேர்ந்த 6 பேர் மீது சிபி​சிஐடி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

சென்னை செங்​குன்​றம் பகுதி​யைச் சேர்ந்​தவர்​கள் சத்​தி​யமூர்த்தி, புவனேஸ்வரி. இவர்​கள் ‘சாட்சி ஸ்​டார் ஏஜென்சி’ என்ற பெயரில் பதிவு செய்​யப்​படாத சிட்​பண்ட் நிறு​வனத்தை நடத்தி வந்​தனர். இதன் கிளை அலு​வல​கம் புதுச்​சேரி மறைமலை அடிகள் சாலை​யில் தொடங்​கப்​பட்​டது.

இந்த அலு​வல​கத்​தின் பொறுப்​பாளர்​களாக சென்னை செங்​குன்​றத்தை சேர்ந்த பவானி இளவேனில் மற்​றும் வெற்​றிசெல்​வன் (எ) ஜெயக்​குமார் ஆகியோர் செயல்​பட்டு வந்​துள்​ளனர். மேலும், புதுச்​சேரி முதலியார்​பேட்​டையைச் சேர்ந்த மதிவாணன் (38) என்​பவர் இந்​நிறு​வனத்​தில் ஊழியராகப் பணி​யாற்றி வந்​துள்​ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு புதுச்​சேரி​யில் கிளை அலு​வல​கத்தை தொடங்​கிய இந்​நிறு​வனத்​தினர், தீபாவளி சீட்டு, பொங்​கல் சீட்டு, வருடாந்​திர சீட்டு, அட்​சய திருதியை சீட்டு உள்​ளிட்ட பல்​வேறு திட்​டங்​களை அறி​முகப்​படுத்தி பொது​மக்​களிடம் பணம் வசூலித்து வந்​துள்​ளனர்.

புதுச்​சேரி, கடலூர், விழுப்​புரம் உள்​ளிட்ட பல்​வேறு பகுதி​களை சேர்ந்த ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் இந்த சீட்டு திட்​டங்​களில் சேர்ந்​துள்​ளனர். 2022-ல்

தீபாவளி சீட்டு உள்​ளிட்ட திட்​டத்​தில் சேர்ந்​தவர்​களுக்கு சமையல் பொருட்​கள், இனிப்​பு​கள், பட்​டாசுகள், பணம் மற்​றும் தங்க நாணயம் வழங்​கப்​படும் என அறி​வித்​துள்​ளனர். அதன்​படி பணம் கட்​டிய​வர்​களுக்கு கொடுத்​துள்​ளனர்.

அதன்​பிறகு 2023-ல் சிலருக்கு மட்​டுமே கொடுத்து வந்​துள்​ளனர். 2024-க்கு பிறகு அனைத்து சீட்டு பணத்​தையும் பெற்​றுக்​கொண்டு அதன்​பிறகு எதையும் கொடுக்​க​வில்லை. இது​குறித்து பொறுப்​பாளர்​களிடம் கேட்​டபோது உரிய பதில் கிடைக்​க​வில்லை.

இத​னால் சந்​தேகமடைந்த ஊழியர் மதிவாணன், புதுச்​சேரி சிபி​சிஐடி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். விசா​ரணை​யில் தீபாவளி சிட்​பண்ட் உள்​ளிட்ட திட்​டத்​தின் மூலம் 1000-க்​கும் மேற்​பட்​டோரிடம் சுமார் ரூ.4.25 கோடி வசூல் செய்​து​விட்டு, தலைமறைவானது தெரிய​வந்​தது.

இதையடுத்து, மோசடி​யில் ஈடு​பட்ட சென்னை செங்​குன்​றத்​தைச் சேர்ந்த சத்​தி​யமூர்த்தி, புவனேஸ்வரி, பவானி இளவேனில், வெற்​றிச் செல்​வன், திரு​வள்​ளூர் வடிவேல், செங்​குன்​றம் லிங்​கமூர்த்தி ஆகிய 6 பேர் மீதும் நேற்று முன்​தினம் இரவு வழக்​குப் பதிவு செய்த சிபி​சிஐடி போலீ​ஸார் அவர்​களை தேடி வரு​கின்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT