தனுஷ்கோடி அரிச்சல்முனையில் வரவேற்கப்பட்ட அஷ்வத் , லவ் , குஷ் தன்வேஷ்

 
தமிழகம்

தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே இரு மார்க்கத்திலும் நீந்தி கடந்த 4 சிறுவர்கள்

ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வு முயற்சி

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ஆட்​டிசம் பற்றி விழிப்​புணர்வை ஏற்​படுத்த தனுஷ்கோடி - தலைமன்​னார் - தனுஷ்கோடி கடல் பகு​தியை சென்​னையை சேர்ந்த 4 சிறு​வர்​கள் நீந்​திக் கடந்​தனர்.

தமிழகத்​தை​யும், இலங்​கை​யை​யும் பாக் நீரிணை பிரிக்​கிறது. ராமேசுவரம் தீவும், அதைத் தொடர்ந்​துள்ள 13 மணல் தீடைகளும், பாக் நீரிணையை மன்​னார் வளை​கு​டா​வில் இருந்து பிரிக்​கின்​றன. தமிழகத்​திலேயே மிக​வும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறை​களும், ஆபத்​தான ஜெல்லி மீன்​களும் நிறைந்த கடற்​பகு​தி​யும் இதுவே ஆகும்.

பாக் நீரிணைப் பகு​தியை தனி​யாகவோ, குழு​வாக ரிலே மற்​றும் மாரத்​தான் முறை​யிலும் பலர் நீந்​திக் கடந்​துள்​ளனர். இந்நிலையில், சென்​னையை சேர்ந்த சிறு​வர்​களான ஸ்ரீ அஷ்வத் (11), லவ் (09), குஷ் (09), தன்​வேஷ் (10) ஆகிய நான்கு பேரும் ஆட்​டிசத்​தால் பாதிக்​கப்​பட்​டோ​ராக இருந்​தா​லும் யாதவி விளை​யாட்டு அகாடமி மற்​றும் இந்​தி​யன் ஆட்​டிசம் சென்​டரில் நீச்​சல் பயிற்சி பெற்று பல்​வேறு நீச்​சல் போட்​டிகளி​ல் பங்​கேற்​றுள்​ளார்.

ஆட்​டிசம் பற்றி விழிப்​புணர்வை ஏற்​படுத்துவதற்காக ஏப்​.18-ம் தேதி தனுஷ்கோடி அரிச்​சல்​முனை கடற்​கரை​யில் பிற்​பகல் 3.25 மணி​யள​வில் 4 சிறு​வர்​களும் ரிலே முறை​யில் நீந்​தத் தொடங்கி 17 கடல் மைல் தொலைவை 9 மணி 5 நிமிடங்​கள் நீந்​தி, இரவு 12.30 மணிக்கு தலைமன்​னார் சென்​றனர்.

உடனே, அங்​கிருந்து தனுஷ்கோடி நோக்கி நீந்​தத் தொடங்​கி, நேற்று (ஞா​யிற்​றுக்​கிழமை) காலை 9.27 மணிக்கு தனுஷ் கோடி அரிச்​சல்​முனையை வந்​தடைந்​தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

இந்​தச் சாதனைக்​காக சிறு​வர்​கள் 4 பேரும் மொத்​தம் 34 கடல் மைல் தொலைவை நீந்​திக் கடக்க 18 மணி 2 நிமிடங்​கள் எடுத்​துக் கொண்​டனர். ஆட்​டிசத்​தால் பாதிக்​கப்​பட்​டோரும் கடலில் அதிக தூர​மும், அதிக நேர​மும் நீந்த முடி​யும் என்ற சாதனையைப் படைத்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT