ரூ.6 லட்சம் கடன் தகராறில், கடன் கொடுக்க வேண்டியவரின் காரை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

 
தமிழகம்

சென்னை: ரூ.6 லட்சம் கடன் தகராறு - பி.எம்.டபிள்யூ. காரை கடத்திய 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ரூ.6 லட்​சம் கடன் தகராறில், கடன் கொடுக்க வேண்​டிய​வரின் காரை கடத்திய 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்​தவர் அபி​காஷ் (21). இவரின் சித்​தப்பா மேக​நாதன். இவர் கொளத்​தூரில் கார் மெக்​கானிக் கடை நடத்தி வரு​கிறார். பழுதுநீக்​கம் செய்​யப்​பட்ட வாடிக்​கை​யாளரின் பி.எம்​. டபிள்யூ காரை கடந்த 4-ம் தேதி இரவு நங்​கநல்​லூர் மெட்ரோ அருகே உரிமை​யாளரிடம் ஒப்​படைக்​கும்​ படி அபி​காஷிடம் கொடுத்து அனுப்​பி​யிருந்​தார்.

அதன்​படி, அபி​காஷ் காரை ஓட்​டிச் சென்று கொண்​டிருந்​த​போது, நங்​கநல்​லூர் அருகே மற்​றொரு காரில் வந்த 4 பேர் கும்​பல், பி.எம்​.டபிள்யூ காரை வழிமறித்து நிறுத்​தி​யது.

பின்​னர் அபி​காஷை தாக்​கி, காரில் இருந்து கீழே இறக்​கி​விட்​டு, பி.எம்​.டபிள்யூ காரை கடத்​திச் சென்​றது. இதுகுறித்து அபி​காஷ் அளித்த புகாரின் பேரில், புனித தோமையர்​மலை போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர்.

சம்பவ இடத்​தில் இருந்த கண்​காணிப்பு கேமரா காட்​சிகள் மற்​றும் கிடைத்த தகவல்​களின் அடிப்​படை​யில், காரை கடத்​தி​யது காஞ்​சிபுரம் மாவட்​டம் பெரும்​புதூரைச் சேர்ந்த கார்த்​திக் (41), சென்னை நந்​தம்​பாக்​கத்​தைச் சேர்ந்த சங்​கர் (51), புனித தோமையர்​மலை​யைச் சேர்ந்த பிர​சாத் (40) மற்​றும் அவரது தம்பி ராமச்​சந்​திரன் (38) ஆகிய 4 பேர் என்​பது தெரிந்​தது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த இந்த 4 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிடம் இருந்து கடத்​தப்​பட்ட பி.எம்​.டபிள்​யூ.கார் மீட்​கப்​பட்​டது.

போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், பழைய கார்​கள் வாங்கி விற்​கும் தொழில் செய்து வரும் கார்த்​திக்​கிற்​கு, பி.எம்​. டபிள்​யூ. காரின் உரிமை​யாள​ரான சக்தி என்​பவர் ரூ.6 லட்​சம் கடன் கொடுக்க வேண்டி இருந்​துள்​ளது.

ஆனால், பணத்தை வழங்​காமல் காலம் தாழ்த்​தி​ய​தால் ஆத்​திரமடைந்த கார்த்​திக், கொடுத்த கடனுக்கு பதிலாக சக்​தி​யின், கார் பழுது நீக்கம் செய்​யப்​பட்டு அவரிடம் ஒப்​படைக்​கக் கொண்டு வரப்​படு​வதை அறிந்​து, தனது கூட்​டாளி​களு​டன் சேர்ந்து வழிமறித்​து காரை கடத்​திச்​ சென்​றது தெரியவந்​தது.

SCROLL FOR NEXT