தமிழகம்

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் 3-வது நாளாகத் தொடர் போராட்டம்

பாதுகாப்புக்கு 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி டெல்​லி​யில் நேற்று 3-வது நாளாக போராட்​டம் நீடித்​தது. இதையொட்டி டெல்லி ஜந்​தர் மந்​தர் பகு​தி​யில் பாது​காப்​புக்​காக சுமார் 5,000-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர்.

வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்​தப் பணி​யின் போது (எஸ்​ஐஆர்) முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்டி உள்​ளன. இந்த விவ​காரத்​துக்​குப் பொறுப்​பேற்று தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி கடந்த 2-ம் தேதி டெல்லி ஜந்​தர் மந்​தரில் காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் போராட்​டத்​தைத் தொடங்​கின. முதல் நாளில் 700-க்​கும் மேற்​பட்ட போராட்​டக்​காரர்​கள் கைது செய்​யப்​பட்​டனர். பின்​னர் அவர்​கள் விடுவிக்​கப்​பட்​டனர்.

இரண்​டாவது நாளி​லும் டெல்லி ஜந்​தர் மந்​தரில் ஏராள​மானோர் குவிந்​தனர். அவர்​களைப் போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். பல்​வேறு இடங்​களில் போலீ​ஸாருக்​கும் போராட்​டக்​காரர்​களுக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதைத் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று ஜந்​தர் மந்​தரில் ஏராள​மான போராட்​டக்​காரர்​கள் குவிந்​தனர். ஞாயிற்​றுக்​கிழமை விடு​முறை என்​ப​தால் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது. அவர்​களை டெல்லி போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். தடுப்​பு​களைத் தாண்ட முயன்ற போராட்​டக்​காரர்​களுக்​கும் போலீ​ஸாருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

ஏற்கெனவே டெல்லியில் கரப்பான்பூச்சி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது பெரும் வன்முறை ஏற்பட்டது. அதுபோன்ற சம்பவத்தைத் தடுக்க டெல்லி ஜந்​தர் மந்​தரில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்​ளன.

அதி​விரைவுப் படை உட்பட 5,000-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட்டு உள்​ளனர். ஜந்​தர் மந்​தர் பகுதி முழு​வதும் ட்ரோன்​கள் மூலம் கண்​காணிக்​கப்​படு​கின்​றன. முக்​கிய பகு​தி​களில் இரும்பு தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. குறிப்​பாக ஜன்​பத் சாலை, சன்​சாத் மார்க், கேரள பவன் பகு​தி​கள் முழு​மை​யாகப் போலீஸ் கட்​டுப்​பாட்​டின் கீழ் உள்​ளன.

டெல்​லி​யில் இளைஞர் காங்​கிரஸ் மற்​றும் இடது​சாரி கட்​சிகள் சார்​பில் நேற்று தனித்​தனி​யாகப் பேரணி நடத்த திட்​ட​மிடப்​பட்டு இருந்​தது. இதற்கு போலீ​ஸார் அனு​மதி வழங்​க​வில்​லை.

முற்​றுகை போராட்​டம்: அக்​டோபர் 6-ம் தேதி டெல்​லி​யில் உள்ள தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்தை முற்​றுகை​யிடும் போராட்​டம் நடத்​தப்​படும் என்று இண்​டியா கூட்​டணி ஏற்​கெனவே அறி​வித்​துள்​ளது. இதற்​காக காங்​கிரஸ் மற்​றும் இண்​டியா கூட்​டணி கட்​சிகளின் தொண்​டர்​கள் டெல்​லி​யில் குவிந்து வரு​கின்​றனர்.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கா​விட்​டால் அக்​டோபர் 10-ம் தேதி முதல் டெல்​லி​யில் மிகப்​பெரிய போராட்​டம் நடத்​தப்​படும் என்று கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி அறி​வித்​துள்​ளது. இதையடுத்து பாதுகாப்புக்காகப் பல்​வேறு மாநிலங்​களில் இருந்து மத்​திய பாது​காப்​புப் படைகளைச் சேர்ந்த வீரர்​கள் டெல்​லிக்கு வரவழைக்​கப்​பட்டு உள்​ளனர்.

இதனிடையே இளைஞர் காங்​கிரஸ் சார்​பில் டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் நேற்று முன்​தினம் தாக்​கல் செய்த மனுவில், ‘‘ஜந்​தர் மந்​தரில் போ​ராட்​டம் நடத்த போலீ​ஸார் அனு​மதி மறுக் ​கின்​றனர். எங்​கள் போராட்​டத்​துக்கு அனு​மதி வழங்க வேண்​டும்’’ என்று கோரப்​பட்டு உள்​ளது. இந்​த மனு விரை​வில்​ வி​சா​ரணைக்​கு எடுத்​துக்​ கொள்​ளப்​பட உள்ளது.

SCROLL FOR NEXT