தமிழகம்

பக்ரீத் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து 3,700 பஸ்கள் இயக்கம்: போக்குவரத்துத் துறை தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: பக்ரீத் பண்​டிகை, தொடர் விடு​முறையை முன்​னிட்டு சென்​னையி​லிருந்து 3,700 பேருந்​துகள் இயக்​கப்​படும் என போக்​கு​வரத்​துத் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக்​கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை: மே 28-ம் தேதி (பக்​ரீத் பண்​டிகை மற்​றும் முகூர்த்​தம்), 29-ம் தேதி (முகூர்த்​தம்) மற்​றும் அதைத் தொடர்ந்து வரும் வாரவிடு​முறை நாட்​களை முன்​னிட்டு சென்​னையி​லிருந்​தும் இதர இடங்​களுக்​கும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதனை கருத்​தில் கொண்டு தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் தினசரி இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக சிறப்​புப் பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு இன்று (மே 26-ம் தேதி) 475 பேருந்​துகளும், நாளை 845 பேருந்​துகளும், வியாழன், வெள்ளி மற்​றும் சனிக்​கிழமை ஆகிய நாட்​களில் தினசரி 455 பேருந்​துகளும் சென்னை கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர். பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு இன்று 80 பேருந்​துகளும், 27-ம் தேதி​முதல் 30-ம் தேதிவரை ஒவ்​வொரு நாட்​களி​லும் 170 பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மாதவரத்​திலிருந்து இன்று 35 பேருந்​துகளும், 27-ம் தேதி​முதல் 30-ம் தேதிவரை ஒவ்​வொரு நாட்​களி​லும் 60 பேருந்​துகளும் மற்​றும் பெங்​களூர், திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோயம்​புத்​தூர் ஆகிய இடங்​களி​லிருந்து பல்​வேறு இடங்​களுக்​கும் 300 சிறப்​புப் பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்​களி​லிருந்து சென்னை மற்​றும் பெங்​களூர் திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவை​கேற்ப அனைத்து இடங்​களி​லிருந்​தும் அன்று 1,085 சிறப்பு பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இச்​சிறப்பு பேருந்து இயக்​கத்தை கண்​காணிக்க அனைத்து பேருந்து நிலை​யங்​களி​லும் போ​திய அலு​வலர்​கள்​ நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT