ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பெயர் பட்டியலில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 429 வாக்களர்கள் பெயர் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தின் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியலில் மாவட்டம் முழுவதிலும் எட்டு சட்டமன்ற தொகுதிகளில் 16,71,760 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 8,06,914 பேரும், பெண் வாக்காளர்கள் 8,64,682, மூன்றாம் பாலினத்தவர்கள் 164 பேரும் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதில் இரட்டை பதிவு, கண்டுபிடிக்க முடியாதவர்கள், இறந்த வாக்காளர்கள், முகவரி இல்லாதவர்கள், வேறு முகவரிக்கு சென்றவர்கள் உள்ளிட்ட காரணங்களால் வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து மொத்தம் 3,25,429 வாக்காளர் பெயர் இடம்பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.