SIR | தேனி மாவட்டத்தில் 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

SIR | தேனி மாவட்டத்தில் 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
Updated on
1 min read

தேனி: தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டார். இதன்படி ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் 10 லட்சத்து 4 ஆயிரத்து 564 வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு திருத்தப் பணிக்கு முன்பு 11 லட்சத்து 30 ஆயிரத்து 303 பேர் இருந்தனர். இதன்படி ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 739 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இதில் இறந்த வாக்காளர்கள் 49 ஆயிரத்து 326, கண்டறிய இயலாத வாக்காளர்கள் 6 ஆயிரத்து 303, வெளியூர் சென்றவர்கள் 60 ஆயிரத்து 215, ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் 9 ஆயிரத்து 587, இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 308 என மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 739 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

மறுசீரமைப்புக்குப் பிறகு 168 வாக்குச்சாவடிகள் அதிகரித்த நிலையில், தற்போது 1,394 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஜன.18-ம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவற்றுக்காக வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

SIR | தேனி மாவட்டத்தில் 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
SIR | தூத்துக்குடி மாவட்டத்தில் 1.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in