தமிழகம்

சென்னையில் இருந்து இன்று 3,122 பேருந்துகள் இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்​டிகைக்கு சொந்த ஊர்​களுக்​குச் செல்​வோருக்​காக சென்​னை​யில் இருந்து இன்று (ஜன. 10) 3,122 பேருந்​துகள் இயக்​கப்​படும் என்று போக்​கு​வரத்​துத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமி்ழகத்​தில் பொங்​கல் பண்​டிகை வரும் 15-ம் தேதி கொண்​டாடப்​பட​வுள்​ளது. சென்னை போன்ற பெருநகரங்​களில் வசிப்​பவர்கள் பொங்​கல் பண்​டிகைக்கு தங்​கள் சொந்த ஊர்​களுக்​குச் செல்​வது வழக்​கம்.

சொந்த ஊர்​களுக்​குச் செல்​லும் மக்​களுக்​காக ஜன. 9-ம் தேதி (நேற்​று) முதல் வரும் 14-ம் தேதி வரை 6 நாட்​களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்​கப்​படும் என்று போக்​கு​வரத்​துத் துறை சார்பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. சென்​னை​யில் கிளாம்​பாக்​கம், கோயம்​பேடு, மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலை​யங்​களில் இருந்து பேருந்துகள் இயக்​கப்​படு​கின்​றன.

சென்​னை​யில் இருந்து பல்​வேறு ஊர்​களுக்கு தின​மும் 2,092 பேருந்துகள் இயக்​கப்​படும் நிலை​யில் நேற்று கூடு​தலாக 1050 பேருந்துகள் இயக்​கப்​பட்​டன. இதே​ போல, பல்​வேறு முக்​கிய நகரங்​களில் இருந்​தும் நேற்று 1,100 பேருந்துகள் சிறப்​பு பேருந்​துகளாக இயக்​கப்​பட்​டன.

இன்று (ஜன. 10) சென்​னை​யில் இருந்து வழக்​க​மாக இயக்​கப்​படும் 2,092 பேருந்​துகளு​டன் கூடு​தலாக 1,030 பேருந்துகள் என மொத்​தம் 3,122 பேருந்துகள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்த முறை பொங்​கல் பண்​டிகை வியாழக்​கிழமை வரு​வ​தால் 4 நாட்​கள் மட்​டுமே விடு​முறை கிடைக்​கிறது. இதனால், பெரும்​பாலான ஐடி நிறு​வனப் பணி​யாளர்​கள் வார இறுதி விடு​முறை​யுடன், திங்​கள், செவ்​வாய், புதன் ஆகிய பணி​நாட்​களை வீட்​டில் இருந்து பணிபுரி​யும் சலுகை பெற்​றுக்​கொண்​டு, தங்​கள் சொந்த ஊர்​களுக்​குப் புறப்​படத் தயா​ராகி​யுள்​ளனர்.

அலு​வலக பணி​யாளர்​களுக்கு புதன்​கிழமை முதல் விடு​முறை கிடைக்​கும் என்​ப​தால் திங்​கள் மற்​றும் செவ்​வாய் ஆகிய நாட்​களில் கூடு​தலாக 2,000 பேருந்​துகளை இயக்க போக்​கு​வரத்​துத் துறை திட்​ட​மிட்​டுள்​ளது. மேலும், பயணி​களின் வசதிக்​காக மாநகரப் போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் இணைப்​புப் பேருந்​துகளும்​ இயக்​கப்​படு​கின்​றன.

SCROLL FOR NEXT