ஷாருக்​ ஈஸ்​வரன்

 
தமிழகம்

புழல் அருகே பாதாள சாக்கடை பணியின்போது கிரேன் கயிறு அறுந்தது ராட்சத குழாய் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: புழல் அருகே பாதாள சாக்​கடை பணி​யின்​போது கிரேன் கயிறு அறுந்து ராட்சத குழாய் கீழே விழுந்​த​ விபத்தில் 3 வயது சிறுவன் உயி​ரிழந்​தான்.

புழல் அடுத்த காவாங்​கரை கண்​ணப்​ப​சாமி நகர் பகுதி முழு​வதும் சென்னை மாநக​ராட்சி சார்​பில், பாதாள சாக்​கடை திட்​டத்​துக்​காக சாலை நடுவே பள்​ளம் தோண்டப்​பட்டு பணி​கள் நடந்து வரு​கின்​றன.

24-வது தெரு​வில் ராட்சத கழி​வுநீர் தொட்டி புதைக்​கும் பணி நடந்து வரு​கிறது. இதற்​காக நேற்று முன்​தினம் மாலை ஒப்​பந்த முறை​யில் இயக்​கப்​பட்ட கிரேன் இயந்​திரம் மூலம், ராட்சத குழாயை தூக்கி பள்​ளத்​தில் வைக்​கும் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது.

அப்​போது, பளு​தாங்​காமல் கயிறு அறுந்​த​தில் குழாய் கீழே விழுந்​தது. அந்த நேரத்​தில், கண்​ணப்​ப​சாமி நகர் 1-வது தெரு​வைச் சேர்ந்த விக்​னேஷ் என்​பவர் தனது 3 வயது மகன் ஷாருக்​ ஈஸ்​வரனுடன் கடைக்கு சென்​று​விட்டு வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது, ராட்சத குழாய் விழுந்​த​தில் இரு​வரும் காயமடைந்​தனர். வலி​யால் துடித்த சிறு​வனை உடனே மீட்​டு, உடனடி​யாக அருக உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர்.

அங்கு முதலுதவி அளித்த பிறகு, மாதவரம் ரவுண்​டானா அருகே உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்த்​தனர். அங்கு தீவிர சிகிச்​சைப் பிரி​வில் சிறு​வனுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது.

இதற்​கிடையே, மருத்​து​வ​மனை முன்பு சிறு​வனின் உறவினர்​கள் கூடிய​தால் பரபரப்​பான சூழல் ஏற்​பட்​டது. இதனால், அங்கு போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்றி சிறு​வன் நேற்று அதி​காலை 3 மணி அளவில் உயி​ரிழந்​தான். பிரேதப் பரிசோதனைக்​காக உடல், அரசு ஸ்டான்லி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பப்​பட்டது. புழல் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, கிரேனை இயக்​கிய ஓட்​டுநர், உரிமை​யாளரிடம் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT