தமிழகம்

ரூ.1 கோடி போதை மூலப்பொருள் பறிமுதல்: ஹைதராபாத்தில் இருந்து கடத்தி வந்த தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் பிளாஸ்​டிக் பாட்​டில்​கள் மற்​றும் பெட்​டிகள் தயாரிக்​கும் தொழிற்​சாலை​யில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்த ரூ.1 கோடி மதிப்​புள்ள 50 கிலோ போதைப்​பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் பறி​முதல் செய்​யப்பட்டது. இது​தொடர்​பாக தந்தை, மகன் உள்​பட 3 பேர் கைது செய்​யப்பட்டனர்.

சென்னை எம்கேபி நகர், அன்னை இந்​திரா நகரில் பிரபல பிளாஸ்​டிக் பாட்​டில்​கள் மற்​றும் பெட்​டிகள் தயாரிக்​கும் தொழிற்​சாலை செயல்​பட்டு வரு​கிறது. இங்கு போதைப் பொருள் தயாரிப்​ப​தற்​குப் பயன்​படுத்​தப்​படும் சூடோபெட்​ரின் வேதிப்​பொருள் பதுக்கி வைக்​கப்​பட்​டிருப்​ப​தாகப் போதைப்​பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

அதன்​பேரில் கடந்த 12-ம் தேதி அங்கு அதி​காரி​கள் திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது 2 சாக்கு மூட்​டைகளில் தலா சுமார் 25 கிலோ வீதம் மொத்​தம் 50 கிலோ சூடோபெட்ரின் வேதிப்​பொருள் மறைத்து வைக்​கப்​பட்​டிருந்​தது கண்​டு​பி​டிக்​கப்​பட்​டது.

இதையடுத்து அவற்றை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர். மேலும், இந்த கடத்​தல் சம்​பவத்​தில் தொடர்​புடைய சென்​னையைச் சேர்ந்த 3 பேரை கைது செய்​தனர். அவர்​களில் தந்தை, மகன் ஆகியோ​ரும் அடங்​கு​வர்.

பறி​முதல் செய்​யப்​பட்ட வேதிப்​பொருளின் சர்​வ​தேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி என கணக்​கிடப்​பட்​டுள்​ளது. இதனைப் பயன்​படுத்தி சுமார் 50 கிலோ போதைப் பொருளை தயாரிக்கலாம் என அதி​காரி​கள் தெரி​வித்தனர்.

முதற்​கட்ட விசா​ரணை​யில், பறி​முதல் செய்​யப்​பட்ட வேதிப்​பொருள் ஹைத​ரா​பாத்​தில் இருந்து சென்​னைக்​குக் கொண்டு வரப்​பட்​டது தெரிய வந்​துள்​ளது.

மேலும், இந்த வேதிப்​பொருளை சட்​ட​விரோத​மாக போதைப்​பொருள் தயாரிப்​ப​தற்​காக வெளி​நாட்​டுக்கு ஏற்​றுமதி செய்ய திட்​ட​மிட்​டிருந்​ததும் தெரியவந்​தது.

சென்​னையை மைய​மாகக் கொண்டு செயல்​படும் சர்​வ​தேச போதைப்​பொருள் கடத்​தல் கும்​பல்​கள், எபிட்​ரின் மற்​றும் சூடோபெட்​ரின் போன்ற வேதிப்​பொருட்​களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்​ளிட்ட நாடு களுக்​குக் கடத்தி வரு​வதும் தெரிய வந்​துள்​ளது.

கைது செய்​யப்​பட்ட 3 பேருக்​கும் இந்த கடத்​தல் சம்​பவத்​தில் உள்ள தொடர்பு, வேதிப்​பொருளின் உண்​மையான மூல இடம், கொண்டு செல்ல திட்​ட​மிடப்​பட்​டிருந்த வெளி​நாடு மற்​றும் இதன் பின்​னணி​யில் செயல்​படும் உள்​நாட்டு, சர்​வ​தேச கடத்​தல் கும்​பல்​கள் குறித்து அதி​காரி​கள் தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

போதைப்​பொருள் கடத்​தல் கும்​பல்​களை ஒழிப்​ப​தற்​கும், போதைப்​பொருள் தயாரிப்​புக்​கான மூல வேதிப்​பொருட்​கள் சட்​ட​விரோத​மாக பயன்​படுத்​தப்​படுவதைத் தடுப்​ப​தற்​கும் தொடர்ந்து நட​வடிக்கை எடுக்​கப்​படும் என்று போதைப்​பொருள் தடுப்பு பிரிவு தெரி​வித்​துள்​ளது.

மேலும், போதைப்​பொருள் கடத்​தல் தொடர்​பான தகவல்​களைப் பொது​மக்​கள் 1933 என்ற தேசிய போதைப்​பொருள் தடுப்பு உதவி எண்​ணில் தெரி​விக்​கலாம் என்​றும் கேட்​டுக் கொள்​ளப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT