தமிழகம்

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎஸ் அதி​காரி​கள் 3 பேர் பணி​யிடம் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து உள்​துறை செயலர் தீரஜ் குமார் வெளி​யிட்​டுள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: தூத்​துக்​குடி மாவட்ட எஸ்​.பி சிலம்​பரசன், டிஜிபி அலு​வல​கத்​தில் இயங்கி வரும் சட்​டம் - ஒழுங்கு உதவி ஐஜி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

          

திருநெல்​வேலி மேற்கு துணை ஆணை​யர் மதன், தூத்​துக்​குடி எஸ்​.பி-​யாக பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார். மேலும், திருநெல்​வேலி தலை​மை​யிட துணை ஆணை​யர் விஜயகு​மார், திருநெல்​வேலி மேற்கு துணை ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இவர் கூடு​தலாக தலை​மை​யிடத்​தை​யும் கவனித்​துக் கொள்​வார்.

SCROLL FOR NEXT