தமிழக சட்டப்பேரவை தேர்தல்: விருப்ப மனு சமர்ப்பிக்க தவெக பிப்.20 வரை கால அவகாசம்!

விஜய்

விஜய்

Updated on
1 min read

சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தவெகவினர் விருப்ப மனுவை சமர்ப்பிக்கக் கால அவகாசம் பிப்.20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலானோரால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர்.

எனவே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, வரும் 20-ம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>விஜய்</p></div>
இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்த நகலை தீயிட்டு கொளுத்தும் போராட்டம்: விவசாயிகளுக்கு பி.ஆர் பாண்டியன் அழைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in